எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 8 தமிழக மாணவர்களிடம் சிபிஎஸ்இ நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று (7.5.2018) கொளத்தூர் தொகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணி களை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் அளித்த பேட்டி விவரம்:

செய்தியாளர்: நீட் தேர்வு மய்யங்களில் சோதனை என்ற பெயரில் மாணவர்களை அவமதித்து இருக்கிறார்களே?

மு.க.ஸ்டாலின்: தமிழ்நாட்டு மாணவர்கள் காப்பியடிப்பதில் தீவிரமானவர்கள் என்பதாக கொச்சைப்படுத்தி, அவர்களை அவமானப்படுத்தும் வகையில் சோதனையிட்ட விதங்களை எல்லாம் தொலைக் காட்சிகளில் கண்ட பெற்றோர்கள் மட்டு மல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களும் வேதனையில் ரத்தக் கண்ணீர் வடித்தார்கள். சிபிஎஸ்இ இதையெல்லாம் உடனடியாக திருத்திக் கொள்ள வேண்டும், தனது செயல்பாடுகளுக்காக தமிழக மாணவர் களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது தான் என்னுடைய கோரிக்கை. ஒட்டுமொத்தமாக, சிபிஎஸ்இ வாரியத்தின் இத்தகைய செயல்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுமட்டுமல்ல, நீட் தேர்வில் தமிழகத்துக்கு நிரந்தரமாக விலக் களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, டில்லிக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அதற்கு குடி யரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று, உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தியாளர்: தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டிஎம்சி தண்ணீர் உடனே வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்திரவிட்டும், தர முடியாது என்று கருநாடக அரசு தெரிவித்துள்ளதே?

மு.க.ஸ்டாலின்: இப்போது இதை புதிதாக அவர்கள் சொல்லவில்லை. தொடர்ந்து அவர்கள் இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை யெல்லாம் கருத்தில் கொண்டுதான், உடனே 4 டிஎம்சி தண்ணீர் வழங்க வேண் டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தி ருக்கிறது. அதுமட்டுமல்ல, காவிரி மேலாண்மை வாரியம் என்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், அதை நிறைவேற்ற வேண்டிய மத்திய அரசும், கருநாடக அரசும் அந்தத் தீர்ப்பை கண்டும் காணாமல் இருக்கின்றன. இதனை கண்டித்து தமிழ  கத்தில் உள்ள பல்வேறு கட்சிகள், அமைப்புகள், விவசாய சங்கத்தை சேர்ந்த வர்கள் எல்லாம் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறோம்.

செய்தியாளர்: தமிழகத்தில் நிதிப்பற்றாக் குறை இருக்கும் நிலையில் 50 கோடி ரூபாய் செலவில் மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு நினைவிடம் அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பது அவசியமா?

மு.க.ஸ்டாலின்: உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெய லலிதா. அவருக்கு நினைவு மண்டபம் அமைப்பது ஜனநாயகத்துக்கு விரோத மானது. ஊழலில் திளைத்துக் கொண்டி ருப்பவர்கள், ஊழல் செய்து சிறைக்கு சென்றவருக்கு நினைவு மண்டபம் கட்டுகிறார்கள் என்று ஸ்டாலின் கூறினார்.