எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, மே 10  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது. அதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஓ.பன்னீர் செல்வம், சசிகலா கட்சி தலைமை ஏற்ற பின்னர் யாரும் எதிர்பாராத வகையில் தனது பதவியிலிருந்து விலகினார். அதன்பின்னர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி ஏற்றார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது அரசின் மீதான நம்பிக்கை தீர்மானத்தை சட்டசபையில் கொண்டுவந்தார். அந்த தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுபோட் டனர். இதுகுறித்து சட்டப்பேர வைத் தலைவர் தனபாலிடம் புகார் செய்யப்பட்டது. ஆனால் இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை.

இந்தநிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என்றும், அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்றும் தமிழக ஆளுநரிடம், டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்களான வெற்றிவேல், தங்க தமிழ்செல் வன் உள்பட 18 எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்தனர்.

இதையடுத்து அந்த 18 எம்.எல்.ஏ.க்கள் மீது அவைத் தலைவரிடம் அரசு கொறடா புகார் செய்தார். புகாரின் அடிப் படையில் அந்த 18 பேரையும் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்து அவைத் தலைவர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து அந்த 18 பேரும் வழக்கு தொடர்ந்தனர். அதேநேரம் தி.மு.க. கொற டா சக்கரபாணி உயர்நீதி மன்றத் தில் புதிதாக ஒரு வழக்கு தொடர்ந்தார்.

அதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள் பட 11 எம்.எல்.ஏ.க்கள் வாக்க ளித்தனர். இதுகுறித்து அவைத் தலைவரிடம் புகார் செய்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தர விட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதே கோரிக்கையுடன் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் களான வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்பட 4 பேர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் அனைத்தையும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

கடந்த மாதம் 27-ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளு படி செய்து தீர்ப்பளித்துள்ளது.

சபாநாயகர் இதுவரை இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை. சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே, இது தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என தலை மை நீதிபதி கூறியிருந்தனர்.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக திமுக இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. ஏற்கெனவே, இது தொடர்பாக எங்கள் தரப்பு கருத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஓ.பன்னீர் செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் கேவியட் மனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner