எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, மே 13- மேற்கு வங்காள முதல்வரும் திரிணா முல் காங்கிரஸ் தலைவரு மான மம்தா வங்காள மொழி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமராக பொறுப்பேற்க தயார் என்று ராகுல்காந்தி கூறி இருப்பது அவரது தனிப் பட்ட கருத்து. அவ்வாறு கூற அவருக்கு உரிமை உண்டு. அதே வேளையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது கடினம்.

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க.வே வெற்றி பெறும். அதே போல மாநில கட்சிக ளான ராஷ்ட்ரீய ஜனதா தளம், தெலுங்குதேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்டவையும் மிகப்பெரிய வெற்றியை பெற உள்ளன. மாநிலக் கட்சிகளின் கூட் டணி ஆட்சிதான் மத்தியில் அமைய வாய்ப்புள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ், பாரதீய ஜனதா ஆகிய இரு கட்சிகளுக்குமே பெரும் பான்மை கிடைக்காது. மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் துணையுடன்தான் எந்தக் கட்சியும் ஆட்சியமைக்கக் கூடிய நிலை உருவாகும்.

அரசியல் ஆதாயத்துக்காக என்னை கொலை செய்வதற்கு ஒரு கட்சி முயன்றது. அதற் காக கூலிப்படைகளுக்கு முன் பணமும் கொடுக்கப்பட்டது. நான் சாவுக்கு ஒரு போதும் அஞ்ச மாட்டேன்.

என்னை அழித்து விட் டால் எனது கட்சியை ஒழித்து விடலாம் என்று நினைப்பது மடத்தனம். நான் இல்லாவிட் டாலும் கட்சி என்றென்றும் உயிர்ப்புடன் இருப்பதற்கான வழிகள் அனைத்தையும் ஏற்கனவே செய்து முடித்து விட்டேன். இவ்வாறு அவர் கூறினார்.