எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத்தில் 104 இடங்களை பி.ஜே.பி. பெற்ற தைக் கண்டு, தமிழக துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் குதூ கலித்துள்ளார். பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற்று தென்னிந்தியாவிற்குள் நுழையும் பாஜக-வுக்கு வாழ்த்துக்கள் என்று பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு வாழ்த்து  அனுப்பியுள்ளார்.

வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பது என்ற சம்பிரதாயத்தையும் தாண்டி, தென்னிந்தியாவில் நுழையும் பா.ஜ.க.வுக்கு வாழ்த்து என்று தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பதன்மூலம் - பி.ஜே.பி.யின் பி' டீம்தான் அதிமுக என்பது வெட்ட வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. மதவாதப் போக்கும், தமிழ்நாட்டு மக்களைத் தொடர்ந்து வஞ்சிக்கும் போக்கும் உள்ள பி.ஜே.பி.,க்கு இப்படி பராக்குப் பாடுகிறார்; ஆட்சியில் முக்கியப் பொறுப்பில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இப்படிச் சொல்லுகிறார் என்றால், இது எவ்வளவுப் பெரிய கீழிறக்கம்!

எதிர்க்கப்படவேண்டியது பி.ஜே.பி. மட்டுமல்ல  - அ.தி.மு.க.வும்தான் என்று மக்கள் முடிவு செய்வார்கள் என்பதில் அய்யமில்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner