எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மணவிழாவை நடத்தி வைத்த மு.க.ஸ்டாலின், புதுமணத் தம்பதியர் உள்பட பலரும் மறியலில் கைது

சென்னை, மே25 தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படு கொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமை கட்சிகள் சென்னையில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக மக்கள் அமைதியாக 100 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அறவழிப் போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 22.5.2018 அன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி  பேரணி யாக சென்ற மக்கள்மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக, இதுவரை 14 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் இன்னும் உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அறவழியில் போராடி மக்களைக் குருவி சுடுவது போல் சுட்டுக் கொன்ற நிகழ்வு தமிழகத்தை மட்டுமல்லாமல், உல கையே உலுக்கியது.

தமிழக அரசின் இந்த கொடூர செயல் காரணமாக தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. திமுக அதன் தோழமைக் கட்சிகளுடன் இணைந்து முழு அடைப்பு, மறியல் போராட்டம் நடத்தி வருகிறது.

தமிழகமெங்கும் முழு அடைப்பு போராட்டம்  நடந்து வரும் நிலையில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து திமுக மற்றும் தோழமைக் கட்சிகள்  பல்வேறு இடங்களில் மறியல் போராட்டங்களை நடத்தி வருகிறது.

மதுராந்தகம்

மதுராந்தகத்தில் திருமண விழாவை நடத்திவைக்க சென்ற திமுக செயல் தலைவர் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் திருமண விழாவை நடத்திவைத்தவுடன், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். அனைத்துக்கட்சினரும், கட்சிகளைக் கடந்து பொதுமக்களும் சாலைமறியல் போராட்டத்தில் கலந்துகொண்டனர். திருமணம் செய்துகொண்ட புதுமணத் தம்பதியரும் போராட்டக்களத்தில் கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தளபதி மு.க.ஸ்டாலின், புதுமணத் தம்பதியர் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தற்கு காரணமான தமிழக முதலமைச்சர் பதவி விலகக்கோரி தமிழகம் முழு வதும் முழு அடைப்புப் போராட்டம், சாலை மறியல் போராட்டங்கள் நடந் துள்ளன.

சென்னையில்

சென்னையில் கிண்டி, சைதாப் பேட்டை, எழும்பூர் ஆகிய இடங்களில் பெருந்திரளானவர்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த மறியல் போராட்டத்தில் திமுக, காங்கிரசு, மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மதி முக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண் டுள்ளது.

சென்னை எழும்பூர் ரயில் நிலை யத்தை திமுகவினர் கூட்டணி கட்சியினருடன் முற்றுகையிட முயன்றனர். திமுக எம்.பி. கனிமொழி, திருமாவள வன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத் தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோரை  காவல்துறை கைது செய்துள்ளது.

பின்னலாடை நிறுவனங்கள் மூடல்

திமுக நடத்தும் முழு அடைப்புக்கு ஆதரவாக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. திருப்பூரில் 2000க்கும் மேற்பட்ட பின்ன லாடை நிறுவனங்கள் மூடப்பட் டுள்ளது.

சேலத்தில் 25,000 கடைகள் மூடல்

சேலம் மாவட்டத்தில் 25,000 கடைகளை அடைத்து வணிகர்கள் முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். திமுக நடத்தும் முழு கடையடைப்பு போராட் டத்திற்கு சேலம் மாவட்ட வணிகர்கள் ஆதரவு தெரிவித்து ஆத்தூர், வாழப் பாடி, கெங்கவல்லி, மேட்டூர் உள்ளிட்ட இடங்களில் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிற மாநில பேருந்துகள் நிறுத்தம்

முழு அடைப்பு  போராட்டம் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் பேருந்துகள் ஆங் காங்கே நிறுத்தப்பட்டுள்ளது. பெங் களூருவிலிருந்து தமிழகம் வரும் பேருந்துகள் ஓசூர் அருகே நிறுத்தப் பட்டுள்ளது. அதேபோல் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பேருந்துகள் தேனி எல்லை மற்றும் நாகர்கோவிலின் களியக்காவிளையில் நிறுத்தப்பட் டுள்ளது. நாள் முழுவதும் இந்த பேருந்துகள் இயங்காது.

புதுச்சேரியிலும் முழு அடைப்பு

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் முழு அடைப்பு  போராட்டம் நடை பெற்று வருகிறது. புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஆளுங் கட்சியான காங்கிரசு மற்றும் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன. பெரும்பாலான இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டு, சாலைகள் வெறிச் சோடி காணப்படுகின்றன. முழு அடைப்பு காரணமாக அரசு பேருந் துகள், தனியார் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்கவில்லை. திரை யரங்குகளும் மூடப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மீனவர்கள் வேலை நிறுத்தம்

கன்னியாகுமரியில் தற்போது மீன் பிடித் தடைகாலம் உள்ளதால் ஏற்கெ னவே விசைப்படகு மீனவர்கள் கட லுக்கு செல்லாமல் உள்ளனர். வள்ளம் மற்றும் கட்டுமரங்களில் சென்று மீன்பிடிப்பவர்கள் மட்டும் கடலுக்கு சென்று மீன் பிடித்து வந்தனர். தூத் துக்குடி துப்பாக்கிச்சூடு, படுகொலை களைக் கண்டிக்கும் வகையில், மீனவர்கள் கண்டனம் தெரிவித்து கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர் பகுதி மீனவர்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

சேலம்-நாமக்கல் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு

சேலம் மாநகரில் செவ்வாய்ப் பேட்டை, லீ பாஜார், பால் மார்க்கெட், புதிய பேருந்து நிலையம் வீரபாண் டியார் நகர், கோட்டை உள்பட பல பகுதிகளில் முழுவதுமாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. லீ பஜாரில் இன்று கடைகள் திறக்கப்படாது என அங்குள்ள சங்க அறிவிப்பு பலகையில் எழுதப்பட்டிருந்தது. இதனால் அந்த பகுதி ஆள்நடமாட்டமின்றி வெறிச் சோடி காணப்பட்டது.

சேலம் திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட், உழவர் சந்தைகள் திறக்கப் பட்டிருந்தாலும் பொது மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கின. கிராமப்புற பேருந்துகள் குறைவாக இயக்கப்பட் டன. பேருந்து நிலையம் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது.

மேட்டூர், ஓமலூர் நகர பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. அரசு பேருந்துகள் குறைவான அளவில் இயக்கப்பட்டன. தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையம், 4 ரதவீதி, கடைவீதி, சங்ககிரி சாலை மற்றும் சேலம் சாலைகளில் கடைகள் மூடப்பட்டு இருந்தன.  ராசிபுரம் பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

குமரி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

குமரி மாவட்டத்தில் 70 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சிறு, சிறு பெட்டி கடைகள், டீக்கடை கள் மட்டுமே திறந்திருந்தன. கோட்டார் மார்க்கெட் உள்ளிட்ட முக்கிய இடங் களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது.

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் ஏராளமாக உள்ளன. இந்த கடைகள் அனைத்தும் இன்று அடைக்கப்பட்டு இருந்தன. வடசேரி, செட்டிக்குளம், கிருஷ்ணன் கோவில், பார்வதிபுரம் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. அப்டா மார்க்கெட், வடசேரி சந்தையில் கடைகள் திறக்கப் பட்டு வழக்கம்போல் செயல்பட்டன. அரசு பேருந்துகள் காவல்துறை பாது காப்புடன் இயக்கப்பட்டன. இதே போல மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் பல இடங்களில் கடைகள் மூடப் பட்டிருந்தன. தக்கலை, மேட்டுக்கடை, அழகியமண்டபம் ஆகிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப் பட்டிருந்தன. குளச்சல் பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் பெரும் பாலான கடைகள் மூடப் பட்டிருந்தன. இன்று பிற்பகலில் குளச்சல் நகர பொதுமக்கள் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு படு கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து பொதுமக்கள் ஒன்றிணைந்து அமைதி பேரணி நடத்துகிறார்கள்.

தருமபுரி மாவட்டத்தில் போச்சம் பள்ளி, மத்தூர் பகுதிகளில் கடைகள் அடைப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பேருந்துநிலையம், சந்தூர் மெயின்ரோடு, கல்லாவி மெயின்ரோடு, தருமபுரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட் டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களான அரசம் பட்டி, புளியூர், பாரூர், கண்ணந்தூர் ஆகிய பகுதிகளிலும் டீக்கடை, பூக் கடை, மருந்து கடை, பாத்திரம் கடை உள்பட பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோன்று போச்சம்பள்ளி அருகே மத்தூரிலும் பஸ் நிலையம், கிருஷ்ணகிரி மெயின்ரோடு, திருப்பத்தூர் மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள பெரும்பா லான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

ராமேசுவரத்தில் கடைகள் அடைப்பு

ராமேசுவரத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner