எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 26 திராவிட முன்னேற் றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரு மான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (25.05.2018) தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் பலியான சம்பவத்திற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் உடனடியாக பதவி விலக செய்ய வலியுறுத்தி, காஞ்சிபுரம் மாவட்டத்துக்குட்பட்ட, அச்சரபாக்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்ட போது கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

மு.க. ஸ்டாலின்: ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்து தூத்துக்குடி மக்கள் ஒன்று திரண்டு ஏறக்குறைய 100 நாட்கள் போராடி வந்த நிலையில், அதன் உச்சகட்டமாக மக்கள் பேரணியை நடத்திய நேரத்தில், குதிரை பேர கையாலாகாத எடப்பாடி பழனிசாமி யின் ஆட்சி காவல்துறையை விட்டு, அவர்கள் மீது தடியடி நடத்தியதோடு மட்டுமில்லாமல், துப்பாக்கிச்சூடு நடத்தி யதில் இதுவரை 14 பேர் இறந்துள்ளனர். 45க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள் ளனர். அவர்களில் சிலர் உயிருக்கு போராடும் நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையெல்லாம் கண்டிக் கின்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உள்ள 9 கூட் டணி கட்சிகள் ஒன்றுகூடி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதன்படி, 25.5.2018 அன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்த வேண்டுமென 9 கட்சிகளின் தலைவர்கள் எடுத்துவைத்த கோரிக்கையை ஏற்று, நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடை யடைப்பு நடந்தியிருக்கிறது.

போக்குவரத்தும் நிறுத்தப்பட்டு இருக் கிறது. திருமண நிகழ்ச்சிகள் முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை என்ற காரணத் தால், அவற்றுக்கு விதிவிலக்கு வழங்கும் வகையில், ஒத்துழைப்பு கொடுத்து, இந்த அறப்போராட்டம் நடைபெறுகிறது. எனவே, முழு அடைப்புப் போராட்டம் முழுமையாக வெற்றி பெற காரணமாக இருந்த வணிகர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கும், அதேபோன்று 9 கட்சிகளின் தோழர்களுக் கும், பல்வேறு அமைப்புகளுக்கும், எங் களுடைய கூட்டணி கட்சிகளின் சார்பில் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் போராட்டம் இன்றோடு முடிவடைந்து விடாது.

காரணம், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக அரசின் சார்பில் அறிவிப்பு வெளியாகவில்லை. அதுமட் டுமல்ல, துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலி யாகியுள்ள கொடுமைக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமியும், காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் உள்ள டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனும் பதவி விலகும் வரையில், போராட்டங்கள் ஜனநாயகரீதியில் தொடர்ந்து நடைபெறும் என்று உறுதி யோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தியாளர்: காவல்துறையை கையில் வைத்திருக்கின்ற முதல்வர் டிவியை பார்த்துதான் துப்பாக்கிச்சூடு பற்றி தெரிந்து கொண்டதாக கூறுகிறாரே?

மு.க. ஸ்டாலின்: உங்களுடைய கேள் வியிலேயே அதற்கான பதில் இருக்கிறது. டிவியில் பார்த்து தெரிந்துகொள்ளும் நிலையில் முதலமைச்சர் இருக்கிறார்.

உளவுத்துறை மூலமாக கூட எதையும் தெரிந்து கொள்ளும் சக்தியற்ற, பொறுப் பற்ற முதலமைச்சராக இருக்கிறார். அவ ருடைய கவலையெல்லாம், கொள்ளை யடிக்கவும், கலெக்ஷன், கரப்ஷன், கமி ஷன் வாங்க வேண்டும் என்பதற்காகவும், தொடர்ந்து இந்த ஆட்சியை தக்கவைத்துக் கொள்வது ஒன்று மட்டுமே. இதற்காகவே, நேற்று முதலமைச்சரும், துணை முதலமைச்சரும், சில அமைச்சர்களும், இங்கு நடந்துள்ள சம்பவங்களை எல்லாம் மத்திய அரசிடம் எடுத்துச் சொல்லி, இந்த ஆட்சியை கலைத்து விட வேண்டாம், நாங்கள் தொடர்ந்து கொள்ளையடிக்க வேண்டும், எனவே எங்களை காப்பாற் றுங்கள், என்று சொல்வதற்காக மாண்புமிகு தமிழக ஆளுநரை சென்று சந்தித்திருக் கிறார்கள் என்று கருதுகிறோம்.

செய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் என அனில் அகர்வால் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறாரே?

மு.க. ஸ்டாலின்:  அவர்களுடைய தரப்பை அவர் சொல்கிறார். ஆனால், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் மக்களுடைய உணர்வு. அரசு வேண்டுமானால் கண் துடைப்புக்காக இன்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூல மாக ஆட்சேபணை தெரிவித்திருக்கலாம், அனுமதி மறுத்திருக்கலாம்.

ஆனால், ஸ்டெர்லை நிர்வாகத்திடம் முதலமைச்சர் மாமூல், கமிஷன் வாங் குகிறார் என்பது தான் எங்களுடைய குற்றச்சாட்டு. உள்ளபடியே, ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துடன் தொடர்பு வைத்துக் கொண்டு, மாமூல், கமிஷன் வாங்குவது உண்மையில்லை என்றால், நியாயமாக அரசு என்ன செய்திருக்க வேண்டுமென்றால், உடனடியாக இப்போதே அமைச்சரவையை கூட்டி ஒரு கொள்கை முடிவெடுத்திருக்க வேண்டும். அதன்படி, ஆலையை மூட நடவடிக்கை எடுத்திருந்தால், எந்த நீதிமன்றமும் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக இருக்கும் நிலை வராது என்பதுதான் உண்மையான நிலை.

செய்தியாளர்: தமிழக அரசு இறுதி முடிவெடுக்காமல் தவறான தகவல்களை சொல்வதற்கு காரணம் என்ன?

மு.க. ஸ்டாலின்: கமிஷன், மாமூல், கலெக்ஷன் தான் காரணம்.

செய்தியாளர்: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பாஜக விதிகளை தளர்த்தியதாக செய்திகள் ஆதாரங்களுடன் வெளிவந்தும், மத்திய அமைச்சர் காங்கிரஸ், திமுக அர சுகள் தான் காரணம் என்று சொல்கிறாரே?

மு.க. ஸ்டாலின்: அவர்கள் அப்படித் தான் பொய் சொல்வார்கள். காரணம் என்னவென்றால், அவர்கள் அனைவருக் கும் கமிஷன் செல்கிறது. மோடியுடன் அந்த நிறுவனத்துக்கு தொடர்பு இருப்ப தாகவும் பரவலாக செய்திகள் வருகின்றன.

நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட் டில் 14 பேர் துப்பாக்கி சூட்டில் இறந் திருக்கிறார்கள், ஆனால் பிரதமர் இதற்காக ஒரு அனுதாப செய்தியாவது இதுவரை சொல்லி இருக்கிறாரா? ஆனால், விஷமத் தனமாக வேண்டுமென்றே நாடகமாடி, பிரச்சினையை திசை திருப்புவதற்காக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

இவ்வாறு தளபதி மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner