எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, ஜூன் 1 போராட்டங் களால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று சொல்லியுள்ள நடிகர் ரஜினிகாந்த்துக்கு தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார். திராவிட முன் னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலை வருமான மு.க.ஸ்டாலின் அவர் கள் நேற்று (31.5.2018) புதுவை யில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி விவரம் வருமாறு:

செய்தியாளர்: போராட்டங் களால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்று ரஜினிகாந்த் சொல்லியிருக்கிறாரே?

மு.க.ஸ்டாலின்: நானும் அதை தொலைக்காட்சியில் பார்த் தேன். என்னைப் பொறுத்த வரை யிலும், அது அவருடைய சொந்த குரலா என்பது ஒரு சந்தேகத் துக்கு உரியதாக இருக்கிறது. இதன் பின்னணி குரலாக, ஏற் கனவே பி.ஜே.பி. சொல்லிக் கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருக்கக்கூடிய அ.தி.மு.க.வும் இதை சொல்லிக் கொண்டிருக்கி றது. எனவே, அந்தக் குரலாக இருக்குமோ என்ற சந்தேகம் எனக்கு வந்திருக்கிறது. எது எப்படி இருந்தாலும், அவர் சூப்பர் ஸ்டார். அவரே, தீவிர வாதிகள் எனக்கு தெரியுமென்று சொல்லியிருக்கின்ற காரணத் தால், அந்தத் தீவிரவாதிகள் யார் என்பதை அவர் நாட்டுக்கு அடையாளம் காட்டினால், நாட்டுக்கு அது நல்லதாக அமையும். அதை அவர் செய் வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அதுமட்டுமல்ல, வாழ்க்கையே ஒரு போராட்டம் தான். போராட்டமில்லாமல் எந்தவொரு காரியத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. இந்தி எதிர்ப்புப் போராட்டமாக இருந்தாலும் சரி, சுதந்திரப் போராட்டமாக இருந்தாலும் சரி, ஜல்லிக்கட்டுக்காக நடத் திய போராட்டமாக இருந்தா லும் சரி, எல்லாமே போராட் டங்கள் நடத்தியே காரியங்கள் சாதிக்கப்பட்டிருக்கின்றன என் பது அவருக்கு தெரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு தளபதி மு.க.ஸ்டா லின் அவர்கள் தெரிவித்தார்.