எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 10 முல்லை பெரியாறு அணை பிரச்சினையை அரசியல் அமர்வுக்கு கொண்டு செல்ல வேண் டும் என்று தமிழக அர சுக்கு வைகோ வலியு றுத்தியுள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கேரள அரசின் பின்ன ணியில் அம்மாநில வழக்கறிஞர் ரஸல் ஜாய் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அவர்களது வாதங்களை எல்லாம் ஏற்றுக்கொண்டு, பேரழிவு தடுக்கப்பட வேண்டும் என்றும், மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும் தனது ஆணையில் நீண்ட உபதேசம் செய்திருக்கிறார். காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தீர்ப்பு தமிழக நலன்களுக்கு கேடாக அமைந்தது. முல்லைப் பெரியாறு பிரச்சினையிலும் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் முறையான குழுக்களை அமைத்து திட்டவட்டமான தீர்ப்பை தந்த பின்னரும், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி 2018 ஜனவரி 11இல் வழங்கிய தீர்ப்பு நமக்கு மிகவும் கவலை தருகிறது. முல்லைப் பெரியாறு அணையில் தமிழகம் 136 அடிக்கு மேல் தண்ணீரை உயர்த்தக் கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வரும் கேரள அரசுக்கு சாதகமான நிலைமை உருவாக நாம் இடம் தரல் ஆகாது. எனவே உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணையை எதிர்த்து, பிரச்சினையை அரசியல் சட்ட அமர்வுக்கு தமிழக அரசு கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

காவிரி ஆணையம்: கேரள பிரதிநிதிகள் பெயரும் பரிந்துரை

கருநாடகா பெயர் தராமல் இழுத்தடிப்பு

புதுடில்லி, ஜூன் 10 தமிழகம், புதுவையை  தொடர்ந்து, காவிரி ஆணையத்தில் கேரள மாநில பிரதிநிதிகள் இருவர் பெயர்களை அம்மாநிலம் மத்திய  அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.  காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி,  காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது; அரசிதழில்  அதிகாரப்பூர்வமாகவும் வெளியிட்டது.   ஆணையத்தில் பங்கேற்கும் பிரதிநிதிகளின் பட்டியலை அளிக்க நான்கு மாநிலங்களுக்கும் மத்திய அரசு மின்  அஞ்சல் மூலம் கடிதம் அனுப்பியிருந்தது. இதில் முதலாவதாக தமிழகமும், பின்னர் புதுவை மாநிலமும் தங்களது பிரதிநிதிகளின் பட்டியலை அனுப்பி  வைத்துள்ளது.  கேரள பிரதிநிதிகளின் பட்டியலை அந்த மாநிலம் இடைக்கால தலைவர் மசூத் உசேனுக்கு அனுப்பியுள்ளது.  மாநில நீர்வளத்துறை செயலாளர் பிக்கு  பிஸ்வால், தலைமை பொறியாளர் கேஏ.ஜோசப் ஆகியோரை பரிந்துரை செய்துள்ளது.  மூன்று மாநிலங்கள் தங்கள் பிரதிநிதிகளை பரிந்துரை செய்து  விட்டநிலையில், கருநாடக அரசு மட்டும், தன் பிரதிநிதிகள பெயர்களை பரிந்துரை செய்யவில்லை.  கருநாடக அரசு தன் பட்டியலை அனுப்பி விட்டால்,  ஆணையத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் உடனே கூட்டி விடலாம் என்று உசேன் கூறியுள்ளார்.   காவிரி ஆணையத்தை ஏற்பது குறித்து புதிய முதல்வர் குமாரசாமி இதுவரை திடமாக எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த மாநில தரப்பில்  ஆஜராகும் பிரதிநிதிகள் பெயர்களையும் பரிந்துரைக்கவில்லை. காவிரி ஆணைய கூட்டம் நடந்து விட்டால் உடனே காவிரியில் தண்ணீர் திறந்து  விடுவது பற்றிய முடிவு எடுக்கப்படலாம் என்பதால் கூட்டத்தை நடத்த கருநாடக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று விவசாயிகள் தரப்பில்  கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 11 முதல் பிளஸ் 1 பாடநூல் விற்பனை

சென்னை, ஜூன் 10 புதிய பாடத்திட்டத்தின்கீழ் வடிவமைக்கப் பட்ட பிளஸ் 1 பாடநூல்கள் வரும் 11-ஆம் தேதி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு பாடநூல் நிறுவனம் மூலம் நேரடியாகவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்கள் மூலமாகவும் பாப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பிளஸ் 1 பாடப் புத்தகங்கள் தனியார் பள்ளி மாணவர்களுக்காக சென்னை டிபிஅய் வளாகத்தில் பாடநூல் கழக கவுன்ட்டரிலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் செயல்பட்டு வரும் சிறப்பு கவுன்ட்டரிலும் விற்பனை செய்யப்படு கின்றன. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிளஸ் 1 பாடப்புத்தகங்கள் ஜூன் 11 முதல் விற்பனைக்கு கிடைக்கும். பாடநூல் கழக விற்பனை கவுன்ட்டர்களிலும், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையகங்களிலும் வாங்கலாம். மாணவ-மாணவிகளும் பாடப் புத்தகங்களை ஆன்லைன்  மூலம் பதிவுசெய்தும் இந்திய அஞ்சல்துறை பார்சல் சேவை, தனியார் கூரியர் சேவை ஆகியவற்றின் மூலமாகவும் பெறலாம் என்றார்.

காவலரை அறைந்ததாக பாஜக எம்எல்ஏ மீது புகார்

போபால், ஜூன் 10 மத்தியப் பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட் டத்தில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சம்பாலால் தேவ்டா காவல் நிலையத்தில் பணியிலிருந்த காவலரை அறைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து காவல்துறை அலுவலர் கூறியதாவது:

பாக்லி சட்டப் பேரவைத் தொகுதியின் பாஜக உறுப்பினர் சம்பாலால் தேவ்டாவின் மகனுக்கும், உதய்நகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் சந்தோஷ் இவ்னதிக்கும் இடையே ஒரு முறை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் அறிந்து அந்தக் காவல் நிலையத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சம்பாலால்  தேவ்டா கடந்த 7.6.2018 அன்று இரவு சென்றார்.  அப்போது, அங்கு பணியில் இருந்த சந்தோஷ் இவ்னதியை அவர் கன்னத்தில் அறைந்தார். இவை அனைத்தும் காவல் நிலையத்தில் பொருத்தப் பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அரசு ஊழியர் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சம்பாலால்  தேவ்டா தொடர்புகொள்ள செய்தியாளர்கள் முயன்றபோதும், அவரை தொடர்புகொள்ள இயலவில்லை. தேவாஸ் மாவட்ட பாஜக செய்தித்தொடர்பாளர் சம்பு அகர்வால் கூறுகையில், விசா ரணைக்கு பிறகே இதுகுறித்து கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner