எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 18- இதுகுறித்து அவர் நேற்று (17.6.2018) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அணைகள் பாதுகாப்பு மசோதா விற்கு 13.6.2018 அன்று மத்திய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ள செயலை, மாநில சுயாட்சியின் மீது பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு நடத்தும் தொடர் தாக்குதல்களில் ஒன்றாகவே திராவிட முன்னேற்றக் கழகம் கருது கிறது.

அணைகள் பாதுகாப்பு குறித்து 1982-லேயே விவாதிக்கப்பட்டு, 1987-இல் முதல் வரைவு மசோதா வெளியிடப் பட்டாலும், மாநில அரசுகளின் அதிகா ரத்தைப் பறிக்கும் வகையில் இந்த அணைகள் பாதுகாப்பு மசோதா இருந் ததால் கடும் எதிர்ப்பு உருவானது. அத னால் இருபத்தைந்து வருடம் கழித்து 2010இல் அய்க்கிய முற்போக்குக்  கூட்டணி அரசு இருந்த போது, இந்த மசோதா முதன் முதலில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

அப்போதும் மாநிலங்களின் எதிர்ப் பைத் தொடர்ந்து, இந்த மசோதா மக்க ளவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு  அனுப்பப்பட்டது என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அய்க்கிய முற்போக்குக்  கூட்டணி அர சில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் விரும்பும் மாநிலங்கள் தங்கள் சட்ட மன்றத்தில் அணை பாதுகாப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்றினால் இந்த அணை பாதுகாப்பு சட்டம் அந்த மாநி லத்திற்குப் பொருந்தும் என்று மாநிலங் களுக்கு விருப்புரிமை வழங்கப்பட்டி ருந்தது.

விருப்புரிமை பறிப்பு

ஆனால் பா.ஜ.க. ஆட்சி பொறுப் பேற்ற பிறகு, முதலில் 2016 மசோதா என்றும்,இப்போது 2018 மசோதா என்றும் பெயர் மாற்றம் பெற்று, நாட்டில் உள்ள  அய்ந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணைகளைப் பாதுகாக்கப் போகிறோம் என்ற போர்வையில் கொண்டு வரப்பட்ட மசோதாவில் அந்த விருப்புரிமை மாநிலங்களுக்குவழங்கப்படாமல் பறிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலப் பட்டியலில் இருக்கும் ஒரு அதிகாரத்தையே அபகரித்திடும் உள் நோக்கத்துடன் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வரும் இந்த மசோதாவிற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டாட்சித்  தத்துவத் தில் நம்பிக்கையுள்ள எந்த மத்திய அர சும், மாநிலங்களையும் அவற்றின் உரி மைகளையும் பாதிக்கும் இது போன்ற சட்டத்தை நிறைவேற்ற முன் வராது; மாநில அரசுகளின் அதிகாரத்தையும் கைப்பற்றித் தன்பைக்குள் போட்டுக் கொள்ள  நினைக்காது.

தன்னிச்சையாகவே ஒப்புதல்

அதை மீறி இப்படியொரு மசோ தாவை கொண்டு வந்துள்ள பா.ஜ.க. அரசு, 2018 அணை பாதுகாப்பு மசோ தாவை இதுவரை மாநிலங்களுக்கு அனுப்பி கருத்துக் கேட்கும் அடிப்படை ஜனநாயகக் கடமையைக்கூட நிறை வேற்றவில்லை. அதற்குள் மத்திய அமைச்சரவை  மாநிலங்களைப்பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் தன்னிச்சை யாகவே ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அரசியல் சட்டத்தால் உருவாக்கப்பட் டுள்ள பொதுப்பட்டியல் அதிகாரங்களில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்துவந்த மத்திய பா.ஜ.க. அரசு,இப்போது மாநி லப்  பட்டியல் பிரிவு 17ல் இருக்கும் இந்த அதிகாரத்திலும் கை வைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

ரகசியமும் மர்மமும்

தமிழகத்தைப் பொறுத்தவரை கர் நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களுடனுமே நதி நீர்ப் பங்கீட்டு ஒப்பந்தங்களின் அடிப்படை யில் தொடர்பில் உள்ள மாநிலம் ஆகும். இதை விட முக்கியமாக முல்லைப் பெரியாறு உள்ளிட்ட நான்கு அணைகள் கேரளாவில் இருந்தாலும், இன்றைக்கும் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. இந்த அணை பாதுகாப்பு சட்டம் தமிழகத்திற்கு உள்ள அந்த உரிமையை நிலைநாட்டியிருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளக் கூட முடியாத அளவிற்கு, பாஜகவின்  புதிய மசோதாவில் ரகசியமும் மர்மமும் பாது காக்கப்படுகிறது.

அப்பட்டமாகக் குறுக்கிடுவதாகும்

இந்தப்  புதிய வரைவு மசோதா தமி ழக அரசுக்கு இதுவரை அனுப்பப்பட வில்லை. அணைகள் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய் வது மாநில அரசின் கடமை. அந்தப் பொறுப்புணர்வு எந்த மாநில அரசுக்கும் இருக்கும் என்பதை மத்திய அரசு ஏனோ உணரத் தவறி, இது போன்ற மசோதாவைக் கொண்டு வருகிறது. குறிப்பாக டெல்லியில் அமையவிருக் கும் ஒரு ஆணையம், மேட்டூர் அணை, கல்லணை போன்றவற்றின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்யும் என்பது, மக்க ளின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்த வேண்டிய  தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் அதிகாரத்தில் அப்பட் டமாகக்  குறுக்கிடுவதாகும். ஆகவே மாநிலப்  பட்டியலில் இருக்கும் அதி காரத்தைப் புறக்கணித்திடும் விதத்தில், அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற் றுவதை உடனடியாக மத்திய பா.ஜ.க. அரசு கைவிட வேண்டும் என்று கேட் டுக் கொள்கிறேன்.

பாஜக அரசின் எதிர்மறை முயற்சி

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பாதுகாப்பை மாநில அரசே கவனித்துக் கொள்ளும் என்றும்; அணைகளின் பாதுகாப்பை அந்தந்த மாநிலங்களே ஏற்றுக்கொள்ளும் என் றும்; மத்திய அரசின் அணை பாதுகாப்பு சட்டம் தேவையில்லாத ஒன்று என்றும்; அதிமுக அரசு நடப்பு சட்ட மன்றக்  கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து, பாஜக அரசின் இந்த எதிர் மறை முயற்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும். கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு அளித்துள்ள அதி காரங்களைப் பறிக்கும் இது போன்ற எதேச்சதிகாரச் செயலில் தொடர்ந்து ஈடு பட்டு, மோதல் போக்கைப் பின்பற்றி வருவதை மத்திய பா.ஜ.க. அரசு கைவிட்டு, மத்திய - மாநில அரசுகளி டையே சுமுகமான நல்லுறவுகளை வளர்த்து, அவற்றை மதித்துப்போற்ற வேண்டும் என்று வலியுறுத்திக் கேட் டுக் கொள்கிறேன்.