எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 14- மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல் துறையினரின் அனுமதி பெற்ற பிறகே பேரிடர் பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

கோவை அருகில் தொண்டாமுத் தூரில் உள்ள தனியார் கலைக் கல்லூ ரியில் நடத்தப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு பயிற்சியின் போது, பி.பி.ஏ படிக்கும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவி லோகேஸ்வரி மரணமடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந் தேன். மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில், மகளை இழந்து வாடும் பெற் றோருக்கும், உடன் பயிலும் மாணவியர்க்கும்  எனது ஆழ்ந்த ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பேரிடர் பயிற்சியை மாணவ,மாணவியர்க்கு கற்றுக் கொடுக்கும் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மீது பயிற்சியாளரோ அல்லது சம்பந்தப் பட்ட கல்லூரி நிர்வாகமோ போதிய கவனம் செலுத்தவில்லை என்பது வேதனை யளிக்கிறது.

குறிப்பாக, இரண்டாவது மாடியிலிருந்து குதிக்க வைக்கும் போது இவ்வளவு கவனக்குறைவாகவும், மெத்தனமாகவும் பயிற்சியாளர் நடந்து கொண்டது மிகவும் கண்டனத்திற்குரியது. பேரிடர் பயிற்சி என்று வரும்போது முதலில் அதில் பங்கேற்போரின் பாதுகாப்புகள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதை கல்வித் துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கவனிக்கத் தவறியதும், அதற்கான வழிகாட்டுதலை வழங்கத் தவறியதும் இதுபோன்ற உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துள்ளது.

ஆகவே, பேரிடர் பயிற்சி, நன்கு அனுபவம் பெற்றவர்கள் முன்னிலையில் நடக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளூர் காவல்துறையினரின் அனுமதி பெற்ற பிறகே இதுபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து அரசுத்  துறைகளுக்கும் தமிழக அரசு உரிய உத்தரவை உடனடியாகப்  பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner