எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இரு அரசுகளும் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற்ற வேண்டும்

தளபதி மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 

சென்னை, ஜூலை 20- தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர் களுக்குகருணை மதிப்பெண் வழங் குவது தொடர்பாக - இருஅரசுகளும் ஒருவரையொருவர்குற்றம் சுமத் தாமல், மேல்முறையீடு மனுவைத் திரும்பப்பெற்று, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி 196 மதிப்பெண்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.

`நீட்’ தேர்வு எழுதிய மொத்த மாணவர்களில் 24 ஆயிரத்து700 மாணவர்கள் தமிழில் தேர்வு எழுதினர். தமிழ் வினாத்தாளில் கேட்கப்பட்ட 49 வினாக்கள்தவறான முறையில் மொழிபெயர்ப்பு செய் யப்பட்டதால் தேர்வு எழுதிய மாணவர்கள் 196மதிப்பெண்களை இழந்துள்ளனர். இதைத்தொடர்ந்து சென்னைஉயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் டி.கே.ரங்கராஜன் எம்.பி தொடர்ந்த வழக்கில், தமிழில்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு196 சிறப்பு மதிப்பெண்கள்வழங்க வேண்டும் என்று, உயர்நீதிமன்றம் அளித்த நல்லதீர்ப்பை அனைவரும் வர வேற்றனர்.

இந்நிலையில் உயர் நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதற்குமாறாக சி.பி.எஸ்.இ. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மாநில அரசு, மத்திய அரசுடன் தொடர்பு கொண்டு, மேல்முறை யீட்டை திரும்பப் பெற நடவ டிக்கை எடுத்திடவேண்டும். மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ் நாட்டிற்கு விதிவிலக்கு அளித்திட வேண்டும்;தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் குறித்து, மத்திய அரசைவலியுறுத்தி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மாநிலஅரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். எனும் கோரிக் கைகள் வலுவாக எழுந்துள்ளன. இந்நிலையில், நேற்றையதினம் நாடாளுமன்றத்தில், வினாத்தாளை மொழிபெயர்க்க தமிழக அரசு நியமித்தவர்களைத்தான் பயன்படுத் தினோம்! எங்கள் மீது தவறில்லை என்று மத்திய மனிதவள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.அதனை அடுத்து நேற்று (19.6.2018)மாலை, தமது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,இரு அரசுகளும் ஒருவரை யொருவர் குற்றம் சுமத்தாமல்,மேல் முறையீட்டு மனுவை திரும்பப் பெற்று உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி 196 மதிப்பெண்களை வழங்க நட வடிக்கை எடுக்கவேண்டும்! என வலியுறுத்தியுள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner