எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.23 “69 சதவிகித இடஒதுக்கீட்டை ஏற்க முடியாமல் தலைதூக்கும் ஆதிக்க சக்திகளை கண்டிப்பதோடு, அதிமுக அரசு முழுநேர கலெக்ஷன் தொழிலில் இருந்து விடுபட்டு இடஒதுக்கீடு பிரச் சினையில் வலிமையாக வாதிட்டு, 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எள்ள ளவும் இடையூறு ஏற்படாதவாறு பாதுகாத்திட வேண்டும்’ என தி.மு.கழக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் நேற்று (22.8.2018) வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பொறுத்துக்கொள்ள முடியாத, சமூக நீதிக்கு எதிரான ஆதிக்க சக்திகள் மீண்டும் தலை தூக்கியிருக்கின்றன. பலமுறை உச்சநீதிமன்றம் இது தொடர்பான மனுக்களை நிராகரித்து 69 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்தும், அதை ஏற்றுக்கொள்ளும் மனமின்றி, ஏதாவது ஒரு காரணத்தை புதிது புதிதாகக் கண்டுபிடித்து வழக் குத் தொடரும் போக்கு காலநடையில் அதிகரித்து வருகிறது.

ஆகவே, உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வரும் இந்த வழக்கில், தமிழ்நாடு அ.தி.மு.க அரசு, கமிஷன்-கலெக்ஷன் என்ற முழுநேரத் தொழிலிலிருந்து சிறிது இடைவேளை எடுத் துக் கொண்டாவது, இட ஒதுக்கீடு- சமூகநீதி என்பது தமிழகத்தின் உயி ராதாரப் பிரச்சினை என்பதால், மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, “இட ஒதுக்கீடு” தலைப்பில் நிபுணத் துவம் பெற்ற மூத்த வழக்குரை ஞர்களை அமர்த்தி, திறமையாகவும் வலிமையாகவும் வாதிட்டு, 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எள்ளளவும் இடையூறு ஏற்படாதவாறு பாதுகாத் திட வேண்டும்.

நீட், ஸ்டெர்லைட் போன்ற பல பிரச்சினைகளில், எதிர்க்கட்சியினரின் எச்சரிக்கை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் சொதப்பியதைப்போல, அ.தி.மு.க அரசு இட ஒதுக்கீடு பிரச் சினையிலும் குழப்பமான அணுகு முறையை மேற்கொள்ளுமானால், வரலாறு மன்னிக்காது என்பதை உணர்ந்து, மிகுந்த விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென வலியுறுத் துகிறேன்.

இவ்வாறு திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner