எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக.24 அணைகள் சீரமைப் புக்கு பல கோடி செலவிடுகிறோம் என்று கூறும் அ.தி.மு.க அரசு, முக்கொம்பு அணையில் உடைந்து போயிருக்கும் மதகுகளை முன்கூட்டியே கணித்து சீர மைக்க தவறியது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக திமுக செயல் தலை வரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் நேற்று (23.8.2018) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

திருச்சி முக்கொம்பு அணையின் 8 மதகுகள் உடைந்து அணைக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால், போக்கு வரத்து பாதிக்கப்பட்டு திருச்சி - -கரூர் சாலையில் உள்ள முக்கொம்பு மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள் முசிறி, நாமக்கல் செல்லும் சாலையை பயன்படுத்த முடி யாத மோசமான நிலை உருவாகியிருக் கிறது.

தற்போது முக்கொம்பு மேலணை என்று ஒவ்வொன்றாக உடைந்து வருவது அணைகள் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க அரசின் அக்கறையின்மை யையும், அலட்சியத்தையும் காட்டுகிறது. அணைகள் சீரமைப்புத் திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கிச் செலவிடுகிறோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் அ.தி.மு.க அரசு, இந்த அணைக ளின் பாதுகாப்பு குறித்து முன்கூட்டியே ஆய்வு செய்து கணித்திடத் தவறியது ஏன்?  அணை சீரமைப்புப் பணிகளின் கீழ் முக்கொம்பு அணை மற்றும் கொள்ளிடம் பாலத்தின் தூண்களை முன் கூட்டியே சீரமைக்கத் தவறிய அ.தி.மு.க அரசே இந்த பாதிப்பு களுக்கு முழுப் பொறுப்பேற்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள அணைகள் மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அணைகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து, முன்னெச் சரிக்கையாக சீரமைப்புப் பணி களை மேற்கொள்ள பொதுப்பணித்துறை தலை மைப் பொறியாளர்கள் மற்றும் வல்லு நர்கள் அடங்கிய குழு அமைத்திட வேண் டும் என்றும், அந்த குழுவின் பரிந்து ரைகளை ஏற்று, தமிழகத்தில் உள்ள அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்திட சீரமைப்புப் பணிகளை இனியும் தாமதப் படுத்தாமல், மேற்கொண்டிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள் ளார்.