எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, செப்.1 திராவிடர் கழக சட்டத்துறை சார்பில் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நேற்று (31.8.2018) மாலை நடைபெற்றது. மாலையில் குறித்த நேரத்தில் தொடங்கப்பட்டு, குறிப்பிட்டபடி, 8.30 மணிக்குள்ளாகவே நிகழ்ச்சி நிறைவுபெற்றது குறிப் பிடத்தக்கது.

திமுக தலைவர் வருகை

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் குறித்த நேரத்தில் அரங்கத்துக்கு வருகை புரிந்தார். பெரியார் திடல் நுழைவாயிலிலிருந்து நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் வரை முத்தமிழறிஞர் கலைஞருக்கு வீரவணக்கம், கலைஞர் வாழ்க, திமுக தலைவர் தளபதி வாழ்க என்ற முழக்கங்கள் வானைப்பிளந்தன.

பார்வையாளர் வரிசையில் அமர்ந்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின், மேனாள் மத்திய அமைச்சர்கள் ஆ.இராசா, வேங்கடபதி, மேனாள் மாநில அமைச்சர்

க.பொன்முடி,  இந்நாள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பி னர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக பொறுப்பாளர்கள், வழக்குரைஞர்கள் பலரும் நினைவேந்தல் நிகழ்வில் பங் கேற்றனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வில் மேடையில் கலைஞர் படம் திறந்து வைக்கப்பட்டது.

திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி இணைப்புரை வழங்கினார்.

நீதியரசர்களுக்கு தமிழர் தலைவர் சிறப்பு

நினைவேந்தல் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற நீதியரசர்களுக்கு இயக்க வெளியீடுகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வழங்கி சிறப்பு செய்தார்.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி எஸ்.மோகன், உச்சநீதி மன்ற மேனாள் நீதிபதி வி.இராமசாமி, உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன், குஜராத் உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி பு.இரா.கோகுலகிருஷ்ணன், சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சாமிதுரை, சென்னை உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன், சென்னை உயர்நீதிமன்றம் மேனாள் நீதிபதி ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த போது அவருடைய மக்கள் நலத்திட்டப் பணிகளை நினைவு கூர்ந்து நினைவேந்தல் உரையாற்றினார்கள். அரசு நிர்வாகத் துறையிலும், நீதித்துறையிலும் சமூக நீதியைக் காத்தவர் கலைஞர் என்று நீதியரசர்கள் பெருமிதத்துடன் நினைவு கூர்ந்தார்கள்.

தமிழகத்தின் மேனாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 7.8.2018 அன்று மறைவுற்றார். அவர் இழப்பை ஏற்கமுடியாத ஒட்டு மொத்த தமிழர்களும் தங்களின் உணர்வுகளை பகிர்ந்த வண்ணம் ஒருவருக்கொருவர் ஆறு தலையும், தேறுதலையும் அளித்தும் பெற்றும் வருகிறார்கள். திமுக கட்சியின் தலைவராக 50 ஆண்டுகாலம் பொறுப்பேற்று அக்கட்சியை வழிநடத்திய கலைஞரின் மறைவுக்கு அக்கட்சியைத் தாண்டி, தமிழகம்முழுவதும் மட்டுமல்லாமல் பன்னாட்டளவில் நன்றியுணர்வுடன் தமிழர்கள் ஜாதி, மத, கட்சி பேதமின்றி பல்துறையினரும் ஒன்றிணைந்து கலைஞருக்கு நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். இரங்கலை பதிவு செய்து வருகின்ற அனை வருமே கலைஞர் அவர்கள் தொண்டாற்றிய தந்தை பெரியார், அறிஞர் அண்ணா வழியில் சுயமரியாதை, சமூக நீதி, பகுத்தறிவு, சமத்துவ, மதச்சார்பின்மை உள்ளிட்டவற்றை பேணிப்பாதுகாப்பது என்று உறுதி கொள்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்திந்திய அளவில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் கலைஞர் அவர்களை தேசியத் தலைவராக ஏற்று, அவர் வழியில் சமூக நீதியை, மதச்சார் பின்மையைக் காப்பாற்றுவோம் என்று சூளுரைத்துள்ளார்கள்.

அந்த வகையில், சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக சட்டத்துறையின் ஏற்பாட்டில்  கலைஞர் அவர்களுக்கு நீதிபதிகளின் நினைவேந்தல் நிகழ்வு உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.

கலந்து கொண்டவர்கள்

கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவு செயலாளர் வீ.குமரேசன், வரியியல் வல்லுநர் ச.இராசரத்தினம், மருத்துவர் இராஜசேகரன், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, வழக்குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, வழக்குரைஞர்கள் கரூர் இராஜசேகரன்,  வழக்குரைஞர் சு.குமாரதேவன், செ.துரை,  திருப்பூர் பாண்டியன், நம்பியூர் சென்னியப்பன், பா.மணியம்மை, தலைமைசெயற்குழு உறுப்பினர் இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால், பொதுக்குழு உறுப்பினர் ஆர்.டி.வீர பத்திரன், எண்ணூர் மோகன், தாம்பரம் ப.முத்தையன், கோ.நாத்திகன், விஜய்ஆனந்த், ந.கதிரவன், செந்துறை இராசேந் திரன், ஆதம்பாக்கம் சவரியப்பன், செம்பியம் கி.இராமலிங்கம், அரும்பாக்கம் சா.தாமோதரன், தமிழ்செல்வம், வேலூர் மண்டல செயலாளர் கு.பஞ்சாட்சரம், போளூர் பன்னீர் செல்வம், பெரியார் மாணாக்கன் திருவண்ணாமலை கவுதமன், மூர்த்தி, கொடுங் கையூர் தங்க.தனலட்சுமி, கோ.தங்கமணி, தாம்பரம் இர. சிவசாமி, பெரம்பூர் கோபால கிருஷ்ணன், புழல் இரணியன், அம்பத்தூர் இராமலிங்கம், வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சுரேஷ், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலைமணி, விமல்ராஜ் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அரங்கினுள்ளும், மேல்மாடப்பகுதியிலும் பார்வையாளர்கள் நிரம்பிஇருந்தார்கள்.

நினைவேந்தல் நிகழ்வின் முடிவில் கழக சட்டத்துறைத் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன் நன்றி கூறினார்.

நடிகவேள் எம்.ஆர். இராதா மன்றமே நிரம்பி வழிந்தது - வெளியிலும் ஏராளமாகத் திரண்டிருந்தனர்.