எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, செப்-4. `பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக என்றால் உடனே கைது செய்து விடுவதா? அப்படிச் சொல் பவர்களையெல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை லட்சம் பேரை சிறை யில் அடைப்பீர்கள் என்று `ட்விட்டர் மூலம் வினா எழுப்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், `நானும் சொல்கிறேன்! பா.ஜ. க.வின் பாசிச ஆட்சி ஒழிக என்று எனக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, `கைதான மாண வியை உடனே விடுதலை செய்க, என்றும் மு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் நேற்று (3.9.2018) பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் முன்பு, ``பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக! என்று முழக்கமிட்ட தால் மாணவி சோபியா அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டு இருப்பதற்கு, தி.மு.கழகத் தலை வரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.கழகத் தலைவர் மு.க .ஸ்டாலின் தனது `ட்விட்டர் பக்கத் தில் வெளியிட்டுள்ள பதிவின் விவ ரம் பின்வருமாறு: ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண் டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல் பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக! இவ் வாறு கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது `ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner