எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, செப். 7- பிள்ளையார் சதுர்த்தி என்கிற பெயரில் சிலைகள் அமைப்பது மற்றும் சிலைகளை கடலில் கரைப்பது தொடர்பாக தமிழக அரசு  விதித்துள்ள கட்டுப்பாடுகள் அரசமைப்புச் சட்ட உரிமை களை மீறுவதாகாது என்று சென்னை உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற தண்ணீரில் கரையாத வேதிப்பொருள்களைக் கொண்டு பிள்ளையார் சிலைகளை உரு வாக்குவதும், பின்னர் அவற்றை கடலில் கொண்டுபோய் போடு வதுமாக பிள்ளையார் சதுர்த்தி விழா என்கிற பெயரால் சுற்று சூழல் மாசடைவது என்பது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்த வண்ணம் இருந்து வருகின்றன.

விநாயகர் சிலை அமைப் பது மற்றும் கடலில்கரைப்பது போன்ற செயல்களால் சுற்று சூழல் மாசுக் கட்டுப்பாடு, தீத் தடுப்பு உள்ளிட்டவைகுறித்து தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து ஆணை பிறப்பித்தது. அதனை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரசின் கட் டுப்பாடுகள் அரசமைப்புச் சட் டத்தின் 25, 26 பிரிவுகளை மீறு வதாக உள்ளதாக எஸ்.சுடலை யாண்டி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். மனுதாரரின் மனுவில், அரசின் வழிகாட்டு தல்கள் நெறிமுறைகள் மத உணர்வுகளில் தலையிடுகிறது. மத நிர்வாகத்தில் அரசு தலையிடக்கூடாது. அரசு ஆணையை செல்லாது என்று உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சா.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகி யோரைக்கொண்ட அமர்வு  முன்பாக அவ்வழக்கு விசா ரணைக்கு வந்தது.

பொதுமக்களின் பாது காப்பு, மாசு கட்டுப்பாடு, தீ விபத்துகள்குறித்து அரசு விதித் துள்ள நிபந்தனைகள் எந்த வகையிலும் அரசமைப்புச்சட்ட உரிமைகளை மீறுவதாகாது என்று உயர்நீதிமன்ற அமர்வு கூறியுள்ளது.

சிலைகள் அமைக்கப்படு கின்ற நாளிலிருந்து அய்ந்து நாள்களுக்குள்ளாக கரைத்திட வேண்டியது கட்டாயம் என்று கூறுவதுகுறித்து எதுவும் கூற முடியாது. அரசு அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடி யாது. ஏனென்றால், உயர்நீதி மன்ற அமர்வின் உத்தரவின் பேரிலேயே வழிகாட்டு நெறி முறைகளை அரசு அளித்துள் ளது என்று குறிப்பிட்டு, வழக்கை நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.