எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை,  செப். 8 பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண் டித்து காங்கிரஸ் கட்சியின் சார் பில் திங்கள்கிழமை (செப்.10) நடைபெற உள்ள நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத் துக்கு திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள்ஆதரவு தெரிவித்து உள்ளன.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்: பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி வருவது மிகுந்த கவலையளிப்பதாகவும், வேதனையளிப்பதாகவும் உள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்தபோதும், அதன் பயன் கள் மக்களுக்குப் போய்ச் சேர்ந்துவிடாமல், பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த அனு மதிப்பதில் மட்டுமே, பாஜக அரசு கடந்த நான்கு ஆண்டு களாக செயல்பட்டு வருகிறது. விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத் தவோ, குறைக்கவோ மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து, காங் கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப் பட்டுள்ள முழு அடைப்புக்கு திமுக முழு ஆதரவு அளித்து, இப்போராட்டம் முழு அள வில் வெற்றி பெற அனைத்து வழிகளிலும் ஒத்துழைக்கும்.

கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு: வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள முழு அடைப்புப் போராட்டத் துக்கு ஆதரவு அளிப்பதென, சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

இதேபோன்று, இப்போராட் டத்துக்கு தமாகா, விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner