எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துணைவேந்தர் நியமன ஊழலில் நடவடிக்கைகோரி ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்

 

சென்னை, அக்.9 தமிழகத்தில் பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்த தாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியதன் அடிப்படையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று நேரில் சந்தித்து வலியுறுத்த ஆளுநரிடம் நேரம் கேட்டுள்ளேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலை வருமான மு.க.ஸ்டாலின் நேற்று (8.9.2018) அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

செய்தியாளர்கள்: பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத்தில் கோடிக் கணக்கில் ஊழல் நடந்துள்ளதாக தமிழக ஆளுநர் நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக் கிறாரே, அது குறித்து தங்கள் கருத்து?

மு.க. ஸ்டாலின்: பல்கலைக் கழகத்தில் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றுக் கொண் டிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் எல்லாத் துறைகளிலுமே ஊழல் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து நாங்கள் ஏற்கனவே தமிழக ஆளுநரிடம் பலமுறை மனுக்கள் தந்திருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியிருக்கிறோம்.

அதையும் தாண்டி, நீதிமன்றத்திற்குச் சென்று இது தொடர்பாக வழக்கும் தொடுத்திருக்கின்றோம். வழக்கு நிலுவை யில் இருந்து கொண்டிருக்கிறது. விசா ரணை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில், ஏற்கனவே நாங்கள் தமிழக ஆளுநரை சந்தித்த போது, பல் கலைக் கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் குறித்து பல மனுக்களை தந்திருக்கின்றோம். ஆனால், அதற்குஉரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

தற்போது ஆளுநர், சென்னையில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில், பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனத் தில் பலகோடி ரூபாய் ஊழல் நடை பெற்றுள்ளது என்று அவரே பேசியிருப் பது வேடிக்கையை அல்ல  வேதனை யைத் தருகிறது.

எனவே, இதுகுறித்து ஆளுநரை நேரில் சந்தித்து முறையிட நேரம் ஒதுக்கித் தருமாறு, நாங்கள் கேட்டிருக்கிறோம்.  தமிழக ஆளுநரே ஒப்புதல் தந்திருக்கிற சூழ்நிலையில், உரிய நடவடிக்கையை வேகமாக எடுக்க வேண்டும் என்று நேரில் சென்று வலியுறுத்துவதற்கு நேரம் கேட்டிருக்கிறோம். நேரம் ஒதுக்கித் தந்த பிறகு, அதனை வலியுறுத்த இருக்கிறோம்.

செய்தியாளர்கள்: மழையை காரணம் காட்டி திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல்களை ஒத்தி வைத்திருக் கிறார்களே, இது ஏற்கக்கூடியதா?

மு.க. ஸ்டாலின்:  இவ்விரு தொகுதி களில் நடைபெற உள்ள இடைத் தேர்தல் களைச் சந்திப்பதற்கு ஆளுங்கட்சியாக இருக்கும்  அ.தி.மு.க. எந்தளவிற்கு பயந்திருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு சாட்சி, சான்று தேவையில்லை. தலைமைச் செயலாளர், அ.தி.மு.க. கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாள ராக மாறி, அவரே தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை தந்திருக்கிறார் என்பதும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner