எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுச்சேரி, அக்.11 மறைந்த தி.மு.க. தலைவர் கலைஞரை சிறப்பிக்கும் வகையில் புதுவையில் அவருக்கு முழு உருவ சிலை, காரைக்கால் பைபாஸ் சாலை மற்றும் பட்டமேற்படிப்பு மய்யத்துக்கு கலைஞர் பெயர் சூட்டப்படும் என்றும், புதுவை பல்கலைக்கழகத்தில் அவரது பெயரில் இருக்கை ஒன்று அமைக்கப்படும் என்றும் ஏற்கெனவே முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்திருந்தார்.

இதையொட்டி கலைஞர் பெயரில் இருக்கை அமைப்பது தொடர்பாக பல்கலைக்கழகத்துக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி இருந்தார். தற்போது அதற்கு பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.

இதுகுறித்து முதலமைச்சர் நாராயணசாமியின் அலுவலக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் முதுபெரும் அரசியல் தலைவரும், தமிழகத்தின் முதல்அமைச்சராக 6 முறை பதவி வகித்தவரும், தி.மு.க. தலைவருமான கலைஞரின் மறைவினையொட்டி அவரை சிறப்பிக்கும் வகையில் புதுவை பல்கலைக்கழகத்தில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க முதல்அமைச்சர் நாராயணசாமி கேட்டுக்கொண்டார்.

அவரின் கோரிக்கையினை ஏற்று புதுவை பல்கலைக் கழகத்தில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி இருக்கை என்ற பெயரில் சிறப்பு இருக்கை ஒன்றை அமைக்க புதுவை பல்கலைக்கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner