எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் அறிவிப்பு

சென்னை, நவ. 5 -நவ.8 அன்று இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவலகத்தில் காத்திருப் புப் போராட்டம் நடைபெறும் என்று சிஅய்டியு மாநிலத் தலைவர் அ.சவுந்த ரராசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிறன்று (நவ.4) சென்னையில் செய்தியாளர் களிடம் சவுந்தரராசன் கூறியதாவது:

யமஹா, ராயல் என்பீல்டு, எம்எஸ்அய் ஆகிய பன்னாட்டு நிறுவ னங்களில் தொழிற்சங்க உரிமை மறுப்பை எதிர்த்து வேலை நிறுத்தம் நடந்து வருகிறது. எம்எஸ்அய் நிறுவ னத்தில் 2 மாதங்களாகவும், யமஹாவில் மற்றும் ராயல் என்பீல்டில் 40 நாட் களுக்கு மேலாகவும் போராட்டம் நடக்கிறது. தொழிலாளர்கள் போராட் டத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்து தொழிலாளர் நலத்துறைஇருதரப்புக்கும் எழுத்துப் பூர்வமாக அறிவுரை வழங்கி யுள்ளது. அதனை தொழிலாளர்கள் ஏற்றுக் கொண்டு பணிக்கு மீண்டும் சென்ற பிறகும், நிர்வாகங்கள் நியாயமற்ற நிபந்தனைகளை விதித்து வேலை நிறுத்தம் தொடர செய்கின்றன.தொழி லாளர் நலத்துறை அறிவுரையை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி, ஆட் சியர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தோம். இதனையடுத்து மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் நடத்திய கூட்டத்தில், நிர்வாகங்கள் கேட்டபடி 2 நாள் கால அவகாசம் தரப்பட்டது.

ஆனால் 20 நாட்களாகியும் பதில் தரவில்லை. இதனால் கடந்த 31ஆம் தேதி மாவட்ட ஆட்சியரே கூட்டிய கூட்டத் தில், மேலும் கால அவகாசம் கேட்டுச் சென்றனர்.இந்தப் போராட்டங்களை அண்டை மாநிலங்களில் நடப்பதுபோல முதலமைச்சர், தொழி லாளர் நலத்துறை, தொழில் துறைஅமைச்சர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தொழிற் சங்கங்கள் அனைத்து விதமான அமைதிப் போராட்டங்களை நடத்தியும் முடிவு ஏற்படவில்லை. இந்தப் பிரச் சினையில் அனைவரும் சேர்ந்து நாடகமாடுவதுபோல் தெரிகிறது.

இந்நிலையில், தொழிலாளர் நலத் துறை அறிவுரையை அமல்படுத்த வலி யுறுத்தி நவ.8 அன்று இருங்காட்டுக் கோட்டையில் உள்ள தொழிலாளர் நலத்துறை துணை ஆணையர் அலுவ லகத்திலும், நவ.9 அன்று சென்னை தேனாம்பேட்டையிலுள்ள தொழிலாளர் நலத்துறை ஆணையர் அலுவல கத்திலும் காத்திருப்புப் போராட்டம் நடக்கும்.இவற்றில் தீர்வு ஏற்படாவிடில் இதரபகுதி தொழிலாளர்களை இணைத்து நவ.12 அன்று கோட்டை (தலைமை செயலகம்) முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

இதற்குள்ளாக தேவை யேற்படின் வேலை நிறுத்தத்திலும் ஈடுபடுவோம். காண்ட்ராக்ட் முறை, எப்டிஇ, நீம் முறைகளை பயன்படுத்தி சட்ட விரோதமாக நிரந்தரப் பணிகளில் ஈடுபடுத்துகிறார்கள். இது குறித்து நூற்றுக்கணக்கான புகார் கொடுத்தும் போதிய நடவடிக்கை இல்லை. இதற் கான போராட்டத்தையும் முன்னெடுக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner