எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொல். திருமாவளவன் பேட்டி

சேலம், நவ.6  வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக அரசை வெளியேற்ற, மதச்சார் பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். தமிழகத்தைப் பொருத்தவரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்ட ணியில் நீடிக்க விரும்புகிறது என அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே 13 வயது சிறுமி ராஜ லட்சுமியை கொடூரமான முறையில் கொலை செய்யப் பட்ட வழக்கில், உரிய விசா ரணை நடத்த வலியுறுத்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட் சியின் சார்பில் சேலத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர் களிடம் கூறியது: தலித் சிறுமி படுகொலை செய்யப்பட்டது தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத் தில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுமியை கொலை செய்த வழக்கை பெண் டி.எஸ்.பி. தலைமையில் விசாரிக்க வேண் டும். பாதிக்கப்பட்டவர்களுக் காக வாதாட அவர்கள் தரப் பைச் சேர்ந்த சிறப்பு அரசு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

வரும் மக்களவைத் தேர்த லில் பாஜக அரசை வெளி யேற்ற, மதச்சார்பற்ற கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும். மூன்றாவது அணி ஏற்பட்டால் பாஜகவுக்கு சாதக மான சூழல் ஏற்படும்.

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்திய ஜனநாயகத் துக்கும், தேசத்துக்கும் பாது காப்பு இல்லாத நிலை ஏற் படும். தமிழகத்தைப் பொறுத்த வரை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிக்க விரும்பு கிறது.

மேலும், தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் விடுதலைச் சிறுத் தைகள் கட்சி போட்டியிடாது. திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் எடுக்கும் முடிவுக்கு முழு ஆதரவு அளிக்கும் என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner