எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உயர்ஜாதி மக்களில் ஏழைகளுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு குறித்து மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை திராவிட இயக்கப் பின்னணியோடு மக்களவையில் சிறப்பாகவே பேசினார். இதனை மனதிற்கொண்டு, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. வுடன் கூட்டணி இல்லை எனக் கூறுவதற்கு தம்பிதுரைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்று கேட்கிறார். அதோடு நின்றாலும் பரவா யில்லை. அ.தி.மு.க.வில் கூட்டணிப்பற்றிப் பேசும் அதிகாரம் முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகி யோருக்கு உள்ளது என்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை, கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முறையில் பேசியதாகக் கூறியுள்ளார். இதில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன வந்தது?

இப்படி கூறும் அதிகாரத்தை அவருக்கு அ.தி.மு.க. கொடுத்துள்ளதா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner