எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாட்டிற்கு எதிராக மோடி செயல்படுகிறார்!

தமிழர்களின் உணர்வுகளை மதித்து உரிமையைக் காப்பதில் ஒன்றுபட்டு நிற்போம்!

நாகர்கோவில், மார்ச் 14 - நாகர்கோவிலில் நேற்று  (13.3.2019) மாபெரும் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள், ``தமிழ்நாட்டிற்கும்,   தமிழர்களுக்கும்,   தமிழ் மொழிக்கும் எதிராகவே பிரதமர் மோடி செயல்பட்டு  வருகிறார்  என்றும் ``தமிழ்நாட்டின்  உணர்வை  மதித்து, உரிமையைக் காப்பத்தில் ஒன்றுபட்டு நிற்போம்" என்றும் குறிப்பிட்டார்.

நாகர்கோவிலில்  நடைபெற்ற  மாபெரும்    தேர்தல் பிரச்சார  பொதுக்  கூட்டத்தில் காங்கிரஸ்  கட்சித்  தலைவர்  ராகுல்  காந்தி ஆற்றிய உரை வருமாறு:-

தமிழகத்தின்  பெரும்  தலைவர்களான காமராஜர்,  மார்ஷல்  நேசமணி  மற்றும் கலைஞரை நினைவு கூருகிறேன்.

எனக்கு  முன்னால்  ஸ்டாலின்  ஒரு கம்பீரமான  உரையாற்றியுள்ளார்.  நான் உங்களுக்கு  ஒரு  மகிழ்ச்சியான  செய்தியைச்  சொல்லப்  போகிறேன்!  ஸ்டாலின் விரைவில்  தமிழ்நாட்டின்  முதல்வராகப்போகிறார்.  வருங்கால  முதல்வர்,  நம்முடன் கலைஞர்  வாழ்கிறார்  என்று  சொன்னார். நான்  பலமுறை  கலைஞர்  அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றவன் என்பதில் பெருமை  கொள்கிறேன்.  நான்  அவரோடு நீண்ட  நேரம்  செலவிட  முடியவில்லை, அவரது  பேச்சைக்  கேட்க  முடியவில்லை என்கிற வருத்தம் எனக் கிருக்கிறது. ஸ்டாலின்  சொன்னதுபோல,  கலைஞர் நம்மிடம்   வாழ்கிறார். கலைஞருக்கு மறைவில்லை,    ஒருநாளும் கலை ஞருக்கு    மறைவில்லை,  ஏனென்றால் கலைஞர்  தமிழர் களின் மொழியாக  இருக்கிறார். தமிழர்களின்  வரலாறாக    இருக்கிறார்.

கலைஞர்  போல  காமராஜரையும்  நாம் அவ்வாறு சொல்லலாம். காமராஜர் போன்ற தலைவர்கள்  இன்று  நம்மிடையே  மேடையில் இருக்கிறார்கள்.  கலைஞர்  மற்றும்  காமராஜரோடு  நாம் எவரையும்  ஒப்பிட  முடியாது.  நமது  தமிழ்மக்களின்  உரிமைகளைக்  காப்பதற்குப் போராடு கிறோம்.  இது  வெறும்  அரசியல் கூட்டணி  அல்ல  -  எண்ணங் களும்    இதயங்களும்  இணைந்திருக்கின்ற  கூட்டணி இது.

தமிழகத்தை வஞ்சிக்கும் மோடியை எதிர்த்து இணைந் திருக்கிற கூட்டணி! நாம்  இங்கே  தமிழர்களின்  மொழி, பண்பாடு,     வரலாறு     ஆகியவற்றிற்கு எதிரான    மோடி,    ஆர்.எஸ்.எஸ்.-ஸை எதிர்த்து    இணைந்திருக்கிறோம்.    நீங்கள் இந்தத்    தேர்தலில்    தமிழ்    மக்களின் உணர்வைப்  பார்ப்பீர்கள்.

தமிழகத்தின்  ஆட்சி  பிரதமர்  அலுவலகத்தால்  நடத்தப் படுகிறது.  கடந்த  காலத்தில்  அ.தி.மு.க.வும்,  தி.மு.க.வும்  போட்டியிட்டன.  இரண்டு  தரப்பிலும்  பல  தலைவர்கள்  இருந்திருக்கிறார்கள்.  ஆனால்  ஒரு போதும் தமிழ் நாட்டில் டில்லியின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஆட்சியிருந்ததில்லை. தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல், இந்தியாவுக்கும் இது  முக்கியமானது.  தமிழ்  மக்களின் உணர்வுப்படி  தமிழ்நாட்டில்  ஆட்சி  நடக்க வேண்டும்.

மாநிலங்களை `ப்ளாக் மெயில் மூலம் அடக்கியாள்கிறார்!

நரேந்திர மோடி ஒவ்வொரு இந்திய நிறுவனத்தையும்,  எல்லா  மாநில  ஆட்சிகளையும் டில்லியிலிருந்து தனது கட்டுப்பாட்டில் வைத்து  ஆள்கிறார்.  ``ப்ளாக்  மெயில் மூலம்  அழுத்தம்  கொடுத்து  அடக்கியாள்கிறார்.  அவர்  தவறு  செய்கிறார்.  தமிழ்மக்கள்  ஒருபோதும்  ஏற்றுக்கொள்ள  மாட்டார்கள்.    தமிழ்    மக்கள்    எப்போதும் உண்மைக்காக   நிற்பவர்கள்.   ஆயிரக்கணக்கான  தமிழர்கள்,  உண்மைக்காக உயிர்  கொடுத்துள்ளார்கள்.  பெரும்புலவர்கள்  இந்த  உண்மையை    தெளிவாக்கியுள்ளனர்.

நரேந்திர மோடி பொய்யைத் தவிர வேறுஎதுவும் பேசுவதில்லை. வங்கிக் கணக்கில்15  லட்சம்  ரூபாய்    ஒவ்வொரு  வருக்கும் போடுவதாகச்  சொன்னார்.  ஆண்டுக்கு  2 கோடி  வேலைவாய்ப்பு களை  உருவாக்கப் போவதாக  சொன்னார்.    இன்று  உலகில் அதிக வேலை இல்லாமல் தவிப்பவர்கள் நம்நாட்டில்தான்  இருக்கிறார்கள்.  இது  கடந்த 4, 5 ஆண்டுகளில் நாடு பார்க்காத வேலையில்லாத்  திண் டாட்டம். விவசாயிகள் கடும் கடன் சுமையிலிருக்கிறார்கள். ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகளின்  போராட்டத்தை  நான்  நேரில்  பார்த்தேன். இப்போது ஒவ்வொரு மாநிலத்திலும் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.  காங்கிரஸ்  ஆட்சிப்  பொறுப்பேற்ற மாநிலங்களில்  விவசாயிகளின்  கடனைத் தள்ளுபடி   செய்கிறது.   நான்   தமிழக விவசாயிகளின்  துயரத்தை  நேரில்  கண்டு அவர்கள் உணர்வைப் புரிந்து கொண்டேன்.

நரேந்திர  மோடி,  ஆயுள்  காப்பீட்டுத் திட்டங்களை தனது நண்பர்களுக்கு தாரை வார்க்கிறார். ஜம்மு-காஷ்மீரின் காப்பீட்டுத்திட்டத்தை    தனது    நண்பர்    அனில் அம்பானிக்கு  கொடுத்திருக்கிறார்.

காப்பீட்டுத் திட்டங்களை

நண்பர்களுக்கு தாரை வார்க்கும் மோடி!

விவசாயிகள் தங்கள் பணத்தை பேரிடர் காலத்தில்   தங்களைக்   காப்பதற்காக காப்பீட்டுத்  திட்டங்களில்  பணம்  போடுகிறார்கள்.  ஆனால்  இதெல்லாம்  பெரு வணிக  நிறுவனங்களுக்குப்  போகிறது. மக்களின்  பணம்  பெருவணிக  நிறுவனங்களுக்கு  சூழ்ச்சியின்  மூலம்  சென்றடைகிறது.  இதுதான்  நரேந்திர  மோடியின் வடிவமைப்பு. பொய்யை மட்டுமே பேசும் மோடியா காவலாளி? இரண்டு இந்தியாவை அவர் உருவாக்குகிறார்.   ஒன்று   பணக்காரர்களுக்காக மட்டுமே உள்ள இந்தியா. மறுபக்கம், கடன் சுமையுள்ள விவசாயிகள் மற்றும் தவிக்கும் வேலையில்லா  இளைஞர் களின்  இந்தியா! பொய்யை  மட்டும்  பேசும்  மோடி,  அவர் தன்னை காவலாளி எனச் சொன்னார். அனில்  அம்பானி  தனது  வாழ்நாளில் ஒரு  விமானம்  கூட  கட்டியதில்லை. நாட்டின்  காவலாளி,  30,000  கோடி ரூபாயை    அனில்    அம்பானிக்கு கொடுத்துள்ளார்.     எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு உலகின் மிகப்பெரிய ஒப்பந்தத்தை  வழங்க  இருந்தோம். 526 கோடி ரூபாய்க்கு ஒரு விமானம் கட்டத் தர இருந்தோம்.

நரேந்திர  மோடி  பிரதமரானதும்  அந்த ஒப்பந்தத்தை   தனது   நண்பர்   அனில்அம்பானிக்கு  கொடுத்துள்ளார்.    1600 கோடி   ரூபாய்க்கு   ஒரு   விமானத்தை வாங்கியுள்ளார்கள்.  பேரம்  பேசியவர்கள் இது  தவறென்று  சொல்லி  விட்டார்கள். ஆனாலும்,  பிரதமர்  பாதுகாப்புத்துறையை மீறி  பிரதமர்  அலுவலகத்தின்  மூலம்  இந்த முடிவை  எடுத்துள்ளார்கள்.

மோசடிக்காக சிறைக்குச் செல்வார்!

நமது  பிரதமர்  இந்த  ஒப்பந்தத்தை அனில்  அம்பானிக்கு  கிடைக்க  வேண்டும் என்று கூறியதை  பிரான்சு அதிபர் பொது வெளியில்  கூறியுள்ளார்.  இந்த  30,000கோடி  ரூபாய்  நேரடியாக  அம்பானிக்குச் சென்று  விட்டது.  திருவள்ளுவர்  கூறியபடி ``வாய்மையே  வெல்லும்.  நரேந்திர  மோடி இந்த  மோசடிக்காக  சிறைக்குச்  செல்வார். காங்கிரஸ்  மீண்டும்  ஆட்சிக்கு  வந்தால் இளைஞர்களுக்கு     வேலை     வாய்ப்பு கிடைக்கும்.  பண  மதிப்பிழப்பால்  ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கு உதவுவோம்.

`மேட் இன் தமிழ்நாடு எனும் நிலைமை உருவாகும்!

தமிழ்நாடு     உற்பத்தித்     துறையில் உலகின்  தலைநகரமாக  மாறும்  தகுதி பெற்றதாக  உள்ளது.  இப்போது  உங்கள் செல் போனின் பின்பக்கமோ , சட்டையின் பின்  பக்கமோ  பார்ப்பீர்கள்  என்றால்  ``மேட் இன்  சைனா  -  சீனாவில்  தயாரிக்கப்பட்டது  என்று  பொறிக்கப்பட்டிருக்கும். 2019-இல்   நமது   ஆட்சி   அமைந்ததும், தமிழ்நாடு தொழில் துறையில் முன்னேறிய மாநிலமாக  உருவாகும்.  அப்போது,  எந்த செல்போனிலும்,     சட்டையிலும்     பின் புறத்தில் பார்த்தால் `மேட் இன் - தமிழ்நாடு -  தமிழ்நாட்டில்  தயாரிக்கப்பட்டது  எனபொறிக்கப்படும் நிலைமை உருவாகும் எனமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தின்  தொழில்  வளர்ச்சி  எங்களது  திட்டத்தின்  முக்கிய  அங்கமாகும். தமிழகத்தில்  தொழில்  முனைவோருக்கு தொழில் தொடங்க முன்னுரிமைகள் அளிக்கப்படும். இது எங்களது தேர்தல் அறிக்கையில்  இடம்  பெறும்.  தொழில்  தொடங்கமுனைவோருக்கு       வங்கிக்       கடன் வழங்கப்படும்.

மோடி வங்கிக் கடனை நீரவ் மோடிக்கு ரூ.35  ஆயிரம்  கோடி,  சோப்சிக்கு ரூ.35 ஆயிரம் கோடி, அனில் அம்பானிக்கு  ரூ.45  ஆயிரம்    கோடி  என வழங்கியுள்ளார்.    நாங்கள்  அது போல சில பெரிய நிறுவனங்களுக்குவங்கிக் கடன் அளிக்க மாட்டோம்.

வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்!

தொழில் முனைவோருக்கு கடன் உதவி  வழங்கப்படும்.    இந்தியா  சீனாவுடன் தொழில் உற்பத்தியில் போட்டியிடும்  நிலைமையை  உருவாக்குவோம்.  ஏழை  மக்களுக்கு  மகாத்மாகாந்தி   வேலைவாய்ப்பு   உறுதித்திட்டம் முழுமை யாகத் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும்.

இந்தியாவில் பசுமைப் புரட்சியை வெண்மைப்  புரட்சியை  நாம்தான் கொண்டு     வந்தோம்.     தமிழக மக்களின்   புரட்சி கர   எண்ணங்களுக்கு  ஏற்ப  எல்லா  மக்களுக்கும்பயன்  அளிக்கும்  வகையில்  புதுத் திட்டம் கொண்டு வருவோம். அனைவருக்கும்  குறைந்த  பட்ச  வருமான வரம்பை  நிர்ணயித்து  அதை  அறிவிப்போம்.  அந்த  வரம்பிற்கு  குறை வாக  வருமானம்  பெறக்  கூடியவர்கள்  என்றால்  அவர் களுக்கு  அவர்களது  வங்கிக்  கணக்கில்  பணம்செலுத்தப்படும்.

நாட்டின் பணத்தை 15 பேருக்கு மட்டுமே வாரி வழங்கப்பட்டது!

இந்தியாவில்  சாதி,  மத,  மாநில பேதமின்றி  அனை வருக்கும்  இந்த உதவி    வழங்கப்படும்.    புயலால் பாதிக் கப்பட்ட  போது  நான்  இங்கு வந்தேன்.  புயலால்  ஏராளமா னோர் பாதிக்கப்பட்டார்கள். பல  நூறு  பேர் உயிர் இழந்தார்கள். ஆனால் பாதிக்கப் பட்ட  மக்களுக்கு  மத்திய  அரசு உதவி  எதுவும்  செய்ய வில்லை.

இது மிகவும்  வருத்தத்திற்குரியதாகும் நாட்டின்  3  லட்சத்து  50  ஆயிரம் கோடி  ரூபாய்  பணத்தை  மத்தியஅரசு  15  பேருக்கு  மட்டும்  வாரிவழங்கியுள்ளது.  இந்தப்  புயலில்  பல மீனவர்கள்  இறந்துள்ளார்கள்.

மீனவர்கள் மிகவும் கடுமையான, ஆபத்தான  பணிகளில்  ஈடுபடுபவர்கள்.  விவசாயிகளைப்  போல  அவர்களும்  கடுமையான  உழைப்பாளிகள்.

மீனவர் கள்  தங்கள்  தொழில் திறனால்  நாட்டை  முன்னேற்றப்பாதைக்கு  அழைத்துச்  செல்பவர்கள். பல  லட்சம்  மீனவர்கள்  நாட்டை வளமாக்கப்     பாடுபடுகிறார்கள். அவர்கள்  நம்  நாட்டிற்கு  மிகவும் முக்கியமானவர்கள்.   உயிரிழந்த மீனவர்களை கவுரவத்தோடு மதிக்கிறோம்.  மீனவர்களின்  துயரங்கள், அவர்களது        பிரச்சினைகளை நாங்கள்  அவர்களிடம்  அவர்களது குடும்பத்தினரிடம்  கேட்போம்.

மீனவர்கள் பிரச்சினை தீர்க்கப்படும்!

இறந்த  மீனவர்களைக்  கௌரவிக்கும்    வகையிலும்  அவர்களது தேவைகளைப்   பூர்த்தி   செய்யும் வகையிலும்  மீனவர்களுக்கு  என்று தனி  அமைச்சகம்  அமைக்கப்படும். மீனவர்கள் பலவிதமான பிரச்சினைகளை  நாள்தோறும்  சந்திக்கிறார்கள்.    அவற்றைத்    தீர்க்கவென தனியே  ஒரு  அமைச்சகம்  செயல்படும்.  தாய்மார்களுக்கும்  சகோ தரிகளுக்கும்    இவ்  வேளையில்  ஒரு கருத்தினைச்   சொல்ல   இருக்கிறேன்.  நீங்கள்தான்  மிகவும்  முக்கிய மானவர்கள். இந்த நாட்டையே வாழவைப்பவர்கள்.  நீங்கள்தான்  இந்த நாட்டைக் காப்பவர் கள். உங்களின்குரல் நாடு முழுவதும் ஒலிக்க வேண்டும்.

நாங்கள்  2019  ஆம்  ஆண்டு நாடாளுமன்றத்  தேர்தலில்    வெற்றி பெற்று  ஆட்சி  அமைத்ததும்  பெண் களுக்கு  நாடாளுமன்றத்தின்  இரு அவைகளிலும்  33  சதவிகித  இடஒதுக்கீடு தருவோம். மேலும் மத்திய அரசுப்  பணிகளில்  பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவோம்.  இந்த  மேடையில்  இந்த உன்னதமான  தலைவர்கள்  முன்னால்  இருப்பதற்கு  நான்  பெருமைப் படுகிறேன்.

இந்தக்  கூட்டத்திற்கு வந்த மக்களுக்கு நான் நன்றி சொல்லக்  கடமைப்பட்டுள்ளேன்.  இந்த மேடையில்  இருக்கும்  தலைவர்கள் தமிழ்நாட்டின்  உரிமைக்காகப்  பாடுபடுபவர்கள்.

எங்களுக்குள்   சிறு   கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டின்  உரிமையை  நரேந்திர மோடி எடுத்துச் செல்ல நாங்கள் விடமாட்டோம்.    தமிழ்நாட்டின்  உரிமையைக் காப்பதில் நாங்கள் ஒன்றுபட்டு நிற்போம்.

இங்கு தமிழ் நாட்டிற்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் எதிராக மோடி செயல்  படுகிறார்.  அதே  போல இந்தியாவின்  பல  மாநிலங்களுக்கும், அவர்களின் உரிமைகளுக்கும் எதிரான  செயல்களையே  மோடி செய்கிறார்.  இந்த  நாட்டில்  ஒரே கொள்கை,  ஒரே  எண்ணம்  ஆளமுடியாது.  தமிழ்  மக்களின்  உணர்வு களை  நாங்கள்  நன்றாகப்  புரிந்து கொண்டு  உள்ளோம்.

இந்தியா  பல  மொழிகள்,  பல பண்பாடுகள்  கொண்ட  ஒரு  நாடு. 2019   இல்   நாங்கள்   ஆட்சிக்கு வந்தபின்  அனைத்து  மொழிகளை, பண்பாடுகளை     மதிக்கக்கூடிய இந்தியா  உருவாகும்  என  இந்த இனிய  வேளையில்  அனைவருக்கும் உறுதி அளிக்கிறேன்.

கூட்டத்தில் பங்கேற்ற உங்களுக்கும் மற்ற தலைவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் ஒரு முறை    உரித்தாக்கி  விடைபெறு கிறேன்.

இவ்வாறு  காங்கிரஸ்  தலைவர் ராகுல்காந்தி  அவர்கள்  உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner