எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊரணிபுரம் ஏப் 13- தஞ்சை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர் களை ஆதரித்து ஊரணிபுரம் கடைவீதியில் நடைபெற்ற திராவிடர் கழக பரப்புரை கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்றினார்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அ.அருணகிரி தலைமை வகித்தார். திருவோணம் ஒன்றிய தலைவர் சில்லத்தூர் சிற்றரசு அனைவரையும் வரவேற்று பேசினார். திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தொடக்கவுரையாற்றினார். தமிழர் தலைவர் நிறைவுரையாற்றினார்.

அவர் தனது உரையில்: வரக்கூடிய ஏப்ரல் 18 ஆம் நாள் மக்கள் அவதியிலிருந்து விடுதலையடைய கூடிய நாளாகும். மத்தியிலே இருக்கக் கூடிய மோடியின் ஆட்சி வித்தை காட்டும் ஆட்சியாக உள்ளது.நாங்கள் கடந்த 26 ஆம் தேதி இந்த பரப்புரையை தொடங்கினோம்.கடும் வெயிலுக்கிடையேதான் தமிழகம் முழுவதும் பரப்புரை மேற்கொண்டோம். காரணம், இந்த ஆட்சி களால் மக்களுக்கு ஏற்பட்டிருக்க கூடிய வெப்பம் இருக் கிறதே அது இன்னும் கொடுமையாக உள்ளது. எனவே தான் நாங்கள் கடும் வெப்பத்தை பொருட்படுத்தாமல் பரப்புரையில் ஈடுபடுகிறோம்.

இன்று காலை சென்னையில் தி.மு.க.பகுதி செயலா ளர் வீட்டில் குண்டு வீசியுள்ளார்கள். எங்கள் கூட்டத்தில் கலவரம் செய்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். மண்ணுக்கு சமத்துவம் பேசுவதை விட மக்களுக்கு சமத்துவம் பேச வேண்டும். இந்த கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்று பெயர்.

வெறுப்புணர்ச்சி அரசியல்

மோடி வெறுப்புணர்ச்சியை பரப்பி வருகிறார். அவருக்கு இரண்டு பரிசு தர நினைக்கிறேன். ஒன்று பெரியார் பற்றிய புத்தகம். மற்றொன்று கலைஞர் பற்றிய புத்தகம் என்று வருங்கால பிரதமர் ராகுல் காந்தி இன்று தேனியில் நடந்த பரப்புரை கூட்டத்தில் பேசியிருக்கிறார்.

மோடிக்கு பாடம் புகட்டி வீட்டுக்கு அனுப்ப போகும் நாள்தான் ஏப்ரல் 18. எனவே, நமது வேட்பாளர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்திலும், திருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பா ளர் சு.திருநாவுக்கரசர் அவர்களுக்கு கை சின்னத்திலும், தஞ்சை சட்டமன்ற இடைத் தேர்தலில் நீலமேகம் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்திலும் வாக்களிக்கக் கேட்டுக் கொள்கிறோம்.

பரப்புரை கூட்டத்தில் மாவட்ட தி.க.தலைவர் அ. அமர்சிங், மண்டல தலைவர் வெ.ஜெயராமன், திருவோ ணம் ஒன்றிய தி.மு.க.தலைவர் கே.டி.மகேஷ் கிருஷ்ண சாமி, தி.க. பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், சி.பி.அய். ஒன்றிய செயலாளர் மு.ராமசாமி, மாவட்டக்குழு உறுப் பினர்  கோவிந்தராசு, சி.பி.எம். மாவட்டக்குழு உறுப்பி னர் ராமசாமி, தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் அப் துல் மஜீது, பட்டுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், மாவட்ட துணை செயலாளர் நீலகண் டன், திருவாரூர் மாவட்ட தலைவர் வீ.மோகன்,

உரத்தநாடு ஒன்றிய தலைவர் ராசப்பன், செயலாளர் லெட்சுமணன், திருவோணம் ஒன்றிய தி.க. துணை தலைவர் அரங்கதுரை, ஒன்றிய அமைப்பாளர் சாமி.அரசிளங்கோ, திருவாரூர் மாவட்ட செயலாளர் வீர. கோவிந்தராசு, மாநில ப.க.தலைவர் மா.அழகிரிசாமி, பொதுக்குழு உறுப்பினர் மணியன், பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், செயலாளர் ராமகிருஷ்ணன், தஞ்சை மாநகர தலைவர் நரேந்திரன், மாநகர செயலாளர் முருகேசன், பட்டுக் கோட்டை ஒன்றிய தலைவர் வீரமணி, நகர தலைவர் சேகர், வீதிநாடக குழு அமைப்பாளர் பெரியார் நேசன், உரத்தநாடு நகர செயலாளர் ரெ.ரஞ்சித் குமார், தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர்பாண்டி உள்ளிட்ட தோழர்களும் கூட்டணி கட்சியினரும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் திருவோணம் ஒன்றிய தலைவர் கக்கரை ராமமூர்த்தி நன்றி கூறினார்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner