எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஏப்.14  ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் கோவை, நீலகிரி மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் பி.ஆர்.நடராஜன், ஆ.ராசா ஆகியோரை ஆதரித்து கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் வெள்ளிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்ட வைகோ பேசியதாவது:

புல்வாமா சம்பவத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கிறார். இது மிகவும் ஆபத்தான போக்கு. ராணுவம் அனைவருக்கும் பொதுவான அமைப்பு. அது குறிப்பிட்ட மதத்துக்கோ, கட்சிக்கோ சொந்தமானதல்ல.

மக்கள் வரிப் பணத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி கடன் கொடுத்துள்ளது மத்திய அரசு. கடன்பெற்ற முதலாளிகள் பலர் வெளிநாடு களுக்கு தப்பிச் சென்று விட்டனர்.

ஆனால் ஜிஎஸ்டி வரிவிதிப்பால் நாட்டில் தொழில்கள் நசிந்து விட்டன. குறிப்பாக கோவையில் ஏறத்தாழ 5 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து விட் டனர். 50 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப் பட்டு விட்டன. உள்ளாட்சி நிர்வாகங்களில் ஏற்பட்டுள்ள வரிகளால் அடித்தட்டு மக்கள் நேரடியாகப் பாதிப்புக் குள்ளாகியுள்ளனர்.

கஜா புயலின்போது ஒரு வருத்தம் கூட தெரிவிக்காத பிரதமர் தற்போது வாக்கு கேட்பதற்காக பலமுறை தமிழகம் வந்து செல்கிறார். மீத்தேன் வாயு, இந்தியன் ஆயில் நிறுவனம் போன்றவற்றின் திட்டங் களுக்காக ஏராளமான விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கும் நிலையில் உள்ளனர்.

தற்போது முல்லைப் பெரியாறு அணையையும் உடைத்துவிட்டு புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி கொடுக்கும் நிலையில் உள்ளது. இதுகுறித்து கேள்வி கேட்டால் வழக்குகள் பாய்கின்றன. மோடியின் எதேச்சதிகாரத் தால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி உள்ளது.

காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கை களில் பல நல்ல திட்டங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன. இந்தியாவையும், தமிழகத் தையும் பாதுகாக்க காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்றார். பிரச்சாரத்தின்போது வேட்பா ளர்கள் பி.ஆர்.நடராஜன், ஆ.ராசா, திமுக, மதிமுக, மார்க்சிஸ்ட் கட்சிகளின் மாவட் டச் செயலாளர்கள்  உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner