எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு பொங்கல் சீர்வரிசை

இலால்குடி, ஜன.13 இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் திருச்சியிலுள்ள நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு பொங்கல் பரிசாக அரிசி, கரும்பு, வெல்லம், தேங்காய், பருப்பு போன்ற பொருள்களை கொடுத்து வருகின்றார்கள்.

அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் மாவட்ட தலைவர் தே.வால் டேர் தலைமையில் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தும் காப்பாளர் தங்காத்தாளிடம் வழங் கப்பட்டது. மாணவிகளுக்கு அனைத்து உறுப்பி னர்கள் சார்பில் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் தே.வால்டேர், மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் ஆல்பர்ட், மாவட்ட செயலாளர் ஆ.அங்கமுத்து, மு.அட்டலிங்கம், அ.அமிர்தம், க.பிச்சைமணி - பூங்கோதை, தனபால் முரளிதரன், வாளாடி முத்து, வீரமணி, தாளை சத்தியமூர்த்தி, மார்ட்டீன், ஜான்லூயிஸ், மாதவன், சண்முகம், கிருஷ்ணன், மாந்துரை பெரியசாமி, செம்பழனி ஆகியோர் கலந்து கொண்டனர்.  

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner