எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சேலம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கி.ஜவகர் அவர்களின் இளைய மகன் ஜ.காமராஜ் (அமெரிக்கா) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நான்காவது முறையாக ரூபாய் ஆறாயிரம் வழங்கினார். வாழ்த்துகள்! நன்றி!

- - - - - வேலூர் மாவட்டம், கார்ணாம்பட்டு கிராமத்தில் வசித்து வந்த முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி செ.ப.தருமன் அவர்கள் (தையல் கலைஞர்) தனது மறைவிற்குப் பின் உடலை வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடையாக வழங்குமாறு எழுதி வைத்திருந்தார். இவர் 1979இல் இயக்கத்தின் அறிவிப்பின்படி மனுதர்ம நூல் எரிப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு கழகத் தோழர்களோடு வேலூர் மத்திய சிறையில் இருந்தார். மேலும் தனது இறுதி மூச்சு உள்ள வரை தந்தை பெரியாரின் கொள்கைகளை தினந்தோறும் தான் வசித்து வந்த கிராமத்தில் திண்ணைப் பிரச்சாரம் செய்து வந்தார். கடந்த 27.4.2010இல் தனது 80ஆம் வயதில் மறைவுற்றார்.

அவருடைய விருப்பத்திற்கேற்ப 28.4.2010இல் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அவரது உடல் உடற்கொடையாக வழங்கப்பட்டது. அவரது எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவர் விட்டுச் சென்ற கொள்கைப் பாதையில் தொடரும் துணைவியார் த.பேபிதருமன், மகன்கள் த.வீரமணி, மாநில துணைத் தலைவர் (பகுத்தறிவாளர் கழகம்) த.பாலாஜிகணேசன், மகள்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் சார்பாக திருச்சி நாகம்மையார் குழந்தை கள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner