எழுத்துரு அளவு Larger Font Smaller Font


திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தைக் காப்போம்!! என்ற முழக்கத்தோடு மே - 12-இல் பொன்னேரியில் சென்னை மண்டல இளைஞர் எழுச்சி மாநாட்டையொட்டி வடசென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட  புரசைவாக்கம், எழும்பூர், பெரியமேடு, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் மிகுந்த எழுச்சியோடு கடைவீதி வசூல் செய்யப்பட்டது.

வணிகர்கள், இயக்கப்பற்றாளர்கள், நன் கொடைகளை மகிழ்வுடன் வழங்கினார்கள். முதற்கட்டமாக வசூலித்த கடைவீதி வசூல் தொகை ரூபாய். 20,000/- (இருபது ஆயிரத்தை) கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி, கும்மிடிப்பூண்டி மாவட்ட இளை ஞரணித் தலைவர் சு. நாகராசு ஆகியோர்

04-05-2018 அன்று பெரியார் திடலில்  அளித்தனர்.

வசூல் பணியில் ஈடுபட்ட தோழர்கள் வடசென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் தளபதி பாண்டியன், வடசென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் திடல் சோ.சுரேஷ், மாநில மாணவரணி துணைச் செயலாளர்கள் யாழ்.திலீபன், நா.பார்த்திபன், பெரியார் சுய மரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் க.கலை மணி, புரசை இளைஞரணி செயலாளர் கா. காரல் மார்க்ஸ், பெரியார் திடல்  சு.விமல்ராஜ், அ. அம்பேத்கர், பா.பார்த்திபன், ஓவியர் பிரபா கரன், சட்டகல்லூரி மாணவர் பிரவீன் குமார் ஆகியோர் வசூல் பணியில் ஈடுபட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner