எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட மாணவர் கழக பவழவிழா 75ஆவது ஆண்டுவிழா மாநாடு, கழகம் துவங்கப்பட்ட கும்பகோணத்திலேயே நடைபெறுவது குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். நானும் இந்த அமைப்பிலே இரண்டாண்டு காலமிணைந்து செயல்பட்டது எனக்கு பெருமையளிக்கிறது. அண்ணா மலைப்பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, 1963-1965கால கட்டத்தில், அண்ணாமலைப்பல்கலைக்கழக திராவிட மாணவர் கழகச் செயலாளராக செயல்பட்டேன். அப்போது, திரு வாழப்பாடி ராமமூர்த்தி அவர்கள் வி.சிஷீனீ., படித்துக் கொண்டிருந்தார்கள். திருமிகு.பொற்கோ அவர்கள் வி.ளி.லி. படித்துக் கொண்டிருந்தார்கள். திரு.வாழப்பாடியார் அவர்கள் தலைவராகவும், நான் செயலாளராகவும், அப்போதைய திருக்கோவிலூர் வட்ட திராவிடர்கழக செயலாளராக இருந்த திரு.பத்மனாபன்(சோடாக்கடை) அவர்களது மகன் குலோத் துங்கன் அவர்கள் பொருளாளராகவும் பணியாற்றினோம். முதல் ஆண்டு திருவாரூர் கே.தங்கராசு அவர்களை அழைத்து ஒரு கூட் டமும், அடுத்த ஆண்டு, அய்யா தந்தை பெரியார் , விடுதலை ஆசிரியர் வீரமணி அய்யா அவர்களையும் அழைத்துப் பொதுக் கூட்டங்கள் சிறப்பாக நடத்தினோம். அதன் நினைவாக மாநாட்டிற்கு நன்கொடை யாக ரூ.5000/- வழங்குவதில் மகிழ்ச்சியடைகின்றேன்.

- வை.பார்த்திபன், பம்மல்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner