எழுத்துரு அளவு Larger Font Smaller Font

குடந்தை சுயமரியாதைச்சுடரொளி ஆர்.பி.எஸ். ஸ்டாலின் இணையர் இந்திரா, அவரது மகன் வழக்குரைஞர் விசய் தமது குடும்பத்தின் சார்பில் ரூ.5000, மாணவர்கழக மாநாட்டிற்கு நன்கொடையாக கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் வழங்கினார்கள். தமிழர்தலைவர் ஆசிரியர் அவர்கள் பல்லாண்டு காலம் நலமோடு வாழவேண்டுமென தனது அவாவினைதெரிவித்தார்கள். உடன் மாவட்டத் தலைவர் கு.கவுதமன், மாவட்ட விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் க.குருசாமி, மாவட்டஇளைஞரணித்தலைவர் சிவக்குமார்.

குடந்தை திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டிற்கு 2 மணி நேரத்தில் பழனி நெய்க்காரப்பட்டியில் மாநாட்டு நிதி  ரூ.4,640 வசூல்.

குடந்தையில் திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநாட்டிற்கு, 26.06.2018 அன்று மதுரை செல்லூர் பகுதியில் மதுரை மாநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக செயலாளர் எஸ்.செந்தில் குமார் தலைமையில் கடைவீதி வசூல் பணி நடைபெற்றது.

நாமக்கல்  மாவட்ட திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 23.06.2018 அன்று குமாரபாளையம் கடைவீதிகளில் நிதி வசூல் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் அ.கு.குமார்( மாவட்ட தலைவர்),  சு.சரவணன் (நகர தலைவர்), ப.வெற்றிவேல் (ஈரோடு மண்டல    செயலாளர்) கு.இளங்கோவன் (நகர தலைவர்)  மு.சந்திஷ்    (கோபி மாவட்ட தலைவர்),  ப.கணபதி  (கோபி மாவட்ட துணை தலைவர் திராவிட மாணவர் கழகம்), அ.திவ்யா (கோபி மாவட்ட செயலாளர்) கார்த்திக் (நாமக்கல்), எழிலரசன் (நாமக்கல் மாவட்டம்), செல்வன் (கோபி மாவட்டம்), சுதர்சன் (கோபி மாவட்டம்), அன்பரசு (கோபி மாவட்டம்), சுதா  காவியா (கோபி மாவட்டம்), அபிநயா (கோபி மாவட்டம்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி  மற்றும் திருவாரூர் மாவட்ட கழகம் சார்பில் குடந்தையில் நடைப்பெற இருக்கும்  மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்காக திருவாரூர் திரு.வி.க அரசு கலைக் கல்லூரில்       திருத்துறைப்பூண்டி மாவட்ட  மாணவர் கழக தலைவர் அஜெ.உமாநாத் பி.எஸ்.சி., அமைப்பாளர் ரா.தேவராசன் மற்றும் அ.வீரமணி ஆகியோர் கலந்து  கொண்டு மாணவர்களுக்கு பவள விழா மாநாட்டு துண்டறிக்கைகளை  கொடுத்து மாணவர்களை மாநாட்டிற்கு கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner