எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்காக கோவை மண்டல மாணவர் கழக சார்பில் மேட்டுப்பாளையம் மாவட்டத்தில் கடைவீதி வசூல் செய்யப்பட்டது. மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் ஆ.பிரபாகரன் தலைமையில் கோவை மண்டல மாணவர் கழக செயலாளர் ரா.சி.பிரபாகரன், மேட்டுப்பாளையம் மாவட்ட மாணவர் கழக தலைவர் ரா.அறிவுமணி, கோவை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் கு.விஜ யன், மாணவர் கழக தோழர்கள் ரா.அன்புமதி, ராகுல், கவுதமன், ஆகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

 

ஆவடி மாவட்டத்தில்

திராவிட மாணவர் கழக மாநாட்டுக்கு கடைவீதி வசூல்

ஜூலை 8 அன்று கும்பகோணத்தில் நடைபெற உள்ள திராவிட மாணவர் கழக பவளவிழா மாநில மாநாட்டிற்காக 1.07.2018 அன்று சென்னை மண்டல மாணவர் கழக சார்பில் அம்பத்தூர் மார்கெட் பகுதியில் ஆவடி மாவட்டம் மாணவர் கழக செயலாளர் விஜய்  தலைமையில் கடை வீதி வசூல் நடைபெற்றது (வசூல் தொகை ரூ.2610). இதில் பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, ஆவடி மாவட்ட செயலாளர் சிவக்குமார், ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைமணி, ஆவடி மாவட்ட மாணவர் கழக தோழர்கள் சீர்த்தி மற்றும் அறிவுமதி, சென்னை சட்டக் கல்லூரி மாணவர் பிரவீன் குமார், ஆவடி மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் வேலவன், வட சென்னை மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர் பார்த்திபன் ஆகியோர் வசூல் பணியில் ஈடுபட்டனர்.

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner