எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில், ஜாதிமறுப்பு, சுயமரியாதைத் திருமணம் செய்து கொண்ட செய்யாறு தோழர்கள் க.நாகேந்திரன்-இரா.சத்யா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் வாழ்த்துரை வழங்கினார். அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற செய்யாறு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அ.இளங்கோவன் திராவிட மாணவர் கழகப் பவள விழா மாநில மாநாடு குறித்து அறிவித்து, செய்யாறு மாவட்ட நன்கொடையின் இரண்டாம் தவணையாக ரூ.25,000-த்தினை ஒப்படைத்தார். உடன் மாவட்ட ப.க.தலைவர் வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன், செய்யாறு நகரத் தலைவர் தி.காமராஜ், செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தங்கம் பெருமாள், சந்திரசேகரன் உள்ளிட்ட தோழர்கள். (செய்யாறு, 2.7.2018).

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner