எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜுலை 8 திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாட்டிற்கு 02.07.2018 அன்று அடைமழையில் கடை வீதி வசூல் சிறப்பாக நடைபெற்றது. குடந்தை ஒன்றிய துணை தலைவர் ஆ. தமிழ்மணி. நகர செயலாளர் ந. காமராஜ், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன், நகர இளைஞரணி செயலாளர்  பா. மானோகர், குடந்தை ஒன்றிய அமைப்பாளர் அசூர் செல்வம், குடந்தை ஒன்றிய தலைவர் சோழபுரம் த. ஜில்ராஜ், குடந்தை மாவட்ட மாணவர் கழக செயலாளர் அ. அரவிந்தன் ஆகியோர் வசூல் பணியில் ஈடுபட்டனர்.

கிருட்டிணகிரியில் கல்லூரி நுழைவாயிலில் குடந்தையில் நடைபெற உள்ள திராவிடமாணவர் கழக மாநாடு துண்டறிக்கையை  மாணவர் களுக்கு கழக தோழர்கள் வழங்கி மாநாட்டிற்கு அழைத்தனர்.

திராவிட மாணவர் கழக மாநாட்டிற்கு குடந்தை தொழிலதிபர் எச்.ஜபீர் முகமது ரூ.5000 நன்கொடையை ஒன்றிய தலைவர் ஜில்ராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் திராவிடன் கார்த்திக், மாவட்ட மாணவர் கழக தலைவர் நாக.செந்தமிழன், செயலாளர் அரவிந்தன், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்லெனின் பாசுகர் ஆகியோரிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner