19.05.2018 அன்று தியாகதுருகம் சுயமரியாதைச் சுடரொளிகள் கோ.சாமிதுரை (மேனாள் திராவிடர் கழகப் பொருளாளர்), அ.கூத்தன் (மேனாள் மாவட்டத் தலைவர்) ஆகியோர் நினைவரங்க திராவிடர் கழகப் பொதுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலந்து கொண்டு எழுச்சியுரை ஆற்றினார். அக்கூட்டத்தில் சங்கராபுரம் நகர பகுத்தறிவாளர் கழகச் செயலாளரும் இராஜேஸ்வரி - நாராயணன் அறக்கட்டளை நிறுவ னரும் தலைவருமாகிய இரா.நாராயணன் விடுதலை வளர்ச்சிக்காக ரூ. ஆயிரம் நன்கொடை வழங்கினார். நன்றி!