எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வரும்  ஆகஸ்ட் 22 முதல் செப் 11 ஆம் நாள் வரை நாகர்கோவிலில் தொடங்கி சென்னையில் நிறைவு பெற இருக்கும் விழிப்புணர்வு பரப்புரை தொடர் கூட்டம் ஆகஸ்ட் 25 ஆம் நாள் இராமநாதபுரம் நகரில் நடைபெற உள்ளதையொட்டி அதற் கான முன்னேற்பாடு குறித்து இராமநாத புரத்தில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கழக பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மண்டல தலைவர் சாமி.திராவிடமணி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் எம்.முருகேசன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து மாவட்ட செயலாளர் அண்ணா.ரவி, நகர தலைவர் அசோகன், காஞ்சிரங்குடி கார்மேகம்,தொருவளூர் அண்ணா.ராமச்சந்திரன்,

தொருவளூர் முத்துக்குமார்,மண்டபம் ஒன்றிய செயலாளர் காமராசு,

தங்கச்சிமடம் நகர தலைவர் ராயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

நன்கொடை அறிவித்தோர்

ப.க.பொறுப்பாளர் நாகேந்திரன் ரூ.10000

முத்துக்குமார் ரூ.5000

கார்மேகம் ரூ.5000

காமராசு ரூ.5000

அண்ணா.ராமச்சந்திரன் ரூ.11000

தீர்மானம்

1.மண்டபம் ஒன்றிய தலைவர் சகாயம் அவர்களின் தந்தையார் அந்தோனி ராயப் பன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

2. நாகர்கோவில் முதல் சென்னை வரை தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பயண வரவேற்பு பொதுக் கூட்டத்தை 25.07.2018 அன்று இராமநாத புரத்தில் மிக எழுச்சியோடு நடத்துவது, பொதுக்கூட்டத்தை விளக்கி பிளக்ஸ், சுவரெழுத்து,விளம்பரம் செய்வது, நிதி வசூல் உட்பட அனைத்து நடவடிக்கை களுக்கும் கழகத் தோழர்கள், பொறுப் பாளர்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.

3.விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயணம் மேற்கொண்டு 25.07.2018 அன்று இராமநாதபுரம் வருகை தரும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்கு இராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்பது என முடிவு செய்யப்படுகிறது..

கூட்டத்தில்  இராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளராக இரா.முத்துக்குமார் நியமிக்கப்பட்டார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner