எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஓய்வுபெற்ற ஆசிரியரும், தாளாளர் மு.இராசேந்திரனின் முதல் வகுப்பு ஆசிரியருமான ஏ.கே.நடராஜன், திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினார்.

- - - - -

கிருட்டிணகிரி மாவட்ட அமைப்பாளர் ப.முனுசாமி-தமிழ்ச் செல்வியின் பேத்தி கயல் விழி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக வழங்கினார்.

- - - - -

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் நா.சுப்புலட்சுமி - காளிதாஸ் இணையரின் மகளும், சமூக காப்பணித் தோழரும், வழக்குரைஞருமான கா.சொர்ணதீபா - பாலாஜி இணையரின் மகனுமான செம்மொழி நண்பன் முதலாமாண்டு பிறந்த நாளை (10.8.2018) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக மத்தூர் இளைஞர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது.

- - - - -

காமலாபுரம் - காரிமங்கலம் ஒன்றிய செயலாளர்இராமசாமி - முருகம்மாள் ஆகியோரின் ஆண் குழந்தைக்கு முத்தமிழ் என தமிழர் தலைவர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.200 நன்கொடை வழங்கினர்.

- - - - -

கன்னியாகுமரி முதல் சென்னை வரை நடைபெறவுள்ள தமிழர் தலைவரின் விழிப்புணர்வுப் பிரச்சார பெரும் பயண நிறைவு விழா சென்னைப் பொதுக் கூட்டம் தொடர்பாக 28.7.2018 அன்று மாலை சின்மயா நகர், சி.செங்குட்டுவன் இல்லத்தில் சென்னை மண்டல திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு நிறைவு விழா பிரச்சாரக் கூட்டத்திற்கு நன்கொடை அளிப்பதாக அறிவித்தவர்கள்:

தாம்பரம் நகரச் செயலாளர் சு.மோன்ராஜ் ரூ.1000, வடசென்னை மாவட்ட இளைஞரணி சார்பில் ரூ.2000, தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி ரூ.5000, தாம்பரம் மாவட்டச் செயலாளர் கோ.நாத்திகன் ரூ.5000, சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் ரூ.10000, ஆகியோர் நன்கொடை அளிப்பதாக உறுதி அளித்தனர். கழக மகளிரணி சார்பில் முதற்கட்டமாக ரூ.500அய் சி.வெற்றிச்செல்வி அவர்கள் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner