எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை - குன்றத்தூரைச் சேர்ந்த சரவணன் - பிரியா இணையரின் 7ஆம் ஆண்டு மணவிழா மகிழ்வாக (22.8.2018) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கியுள்ளனர். நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் தம்பியும், குடியாத்தம் நகர கழக தலைவருமான வி.மோகன் அவர்களின் இளைய மகன் வே.மா. இளைஞரணி செயலாளர் மோ.அன்பரசன் - சோபனா இணையரின் ஆண் மகவுக்கு 19.8.2018 அன்று தமிழ் ஈழம் என்று பெயர் சூட்டியதன் மகிழ்வாக, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

- - - - -

வேலூர் மண்டல தலைவர் வி.சடகோபன் அவர்களின் மாமாவும், வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ச.ஈஸ்வரி அவர்களின் தந்தையுமான, குடியாத்தம் கிளாஸ் பீடி நிறுவனர் ஏ.எஸ்.பெரியசாமி அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (21.8.2018) சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!

- - - - -

திண்டுக்கல் முன்னாள் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தி.க. பாலுவின் தாயார் குமார.சீதாலெட்சுமி அம்மாள் அவர்களின் 9ஆம் ஆண்டு (22.8.2018) நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.100 நன்கொடை வழங் கப்பட்டது. நன்றி!

- - - - -

நெய்வேலி நகர முன்னாள் திராவிடர் கழக பொருளாளர் இரா.வெற்றியரசு அவர்களின் பதினொன்றாம் ஆண்டு (3.8.2018) நினைவாக ரூ.500 விடுதலை வளர்ச்சிக்கு நன்கொடையாக அவரது மனைவி வாசுகி வெற்றியரசு, மகள்கள் தேனருவி வெற்றியரசு - பா.விஜயராகவன், மருமகன்கள் தேனருவி வெற்றியரசு - நா.விஜய் மனோஜ், பேரன் தருண் ராகவ் மற்றும் கல்லூரி மின் உலர் சலவையகம் ஊழியர்கள்.

- - - - -

திருவாரூர் மண்டல செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி-கலாவதி ஆகியோரின் பெயரன், ப.வீரசேகர்-கி.சுமதி ஆகியோரின் மகனுக்கு அமுதன் என பெயர் சூட்டியதன் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.200 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner