எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* பட்டுக்கோட்டை, ஆக. 25- பெரியார் பெருந்தொண்டரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருமான கே.சுப்பராயலு அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு திராவிடர் கழகத்தைச் சார்ந்த அ. காளிதாசன், வழக்குரைஞர் ஆ.அண் ணாதுரை, பி.மாதவன், து.பாரி, ரெ.சக்தி ஆகியோர் அவரது வீட்டிற்கு சென்று சால்வை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள். தனது பிறந்தநாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடையாக வழங்கினார். நன்றி!

* பெரியார் பெருந்தொண்டரும், தி.க. மாவட்ட துணைத் தலைவருமான சா.சின்னக்கண்ணு அவர்களின் 86ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 06.8.2018 அன்று அவரது வீட்டிற்கு திராவிடர் கழகத்தைச் சார்ந்த அ.காளிதாசன், வழக்குரைஞர் ஆ.அண்ணாதுரை, ஆ.ஆரோக்கியராஜ், ரெ.சக்தி, ஆனந்த் ஆகியோர் அவரது இல்லத்திற்குச் சென்று சால்வை அணிவித்து பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்தனர். உடன் அவருடைய துணைவியாரும், அவருடைய மகன் கபிலன், அவருடைய பேரன்கள் இருவரும் கலந்து கொண்டனர். நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/-மும், நகர திராவிடர் கழக வளர்ச்சி நிதியாக ரூ.10,000/-மும் அ.காளிதாசனிடம் சா. சின்னக்கண்ணு வழங்கினார். நன்றி!

* சேதுபாவாசத்திரம் ஒன்றிய தி.க. முன்னாள் செயலாளர் மறைந்த சத்தியமூர்த்தி அவர்களின் 3ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு  நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000/- நன்கொடையாக வழங்கப் பட்டது. இந்த தொகையினை அவரது துணை வியார் ராசம்மாள், மகள்கள் மங்கையற்கரசி, கனிமொழி ஆகியோர் வழங்கினார்கள். நன்றி!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner