கூடங்குளம் அணுஉலை மிரட்டல்: 3 பேர் கைது +++ 44 குழந்தைகள் பலி: மருத்துவ அதிகாரி இடமாற்றம் +++ தூக்குத்தண்ட‌னையை நிறுத்தி வைத்த சர்தாரி +++ உலக செஸ் போட்டிகள்: 5 ஆவது சுற்று டிரா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

26-9-1952 அன்று பொன் மலையில் ஒருவர் படத்தினைத் திறந்து வைத்து தந்தை பெரியார் இவ்வாறு பேசினார்.

அவர் படத்தைத் திறந்து வைப்பது என் றால், அவரை வணங்கு வதற்கல்ல. அவரைப் பின்பற்ற வேண்டும் என்ப தற்காக. அவருடைய உண்மையான தொண் டினை உழைப்பினை உணர வேண்டும் என்ப தற்காக. மணியாட்டி பூசை செய்து வணங்கு வதற்காக அல்ல. விக்கி ரகங்கள் கூடாது என்கிற ஒருவர் ஏன் படங்களைத் திறக்கிறார் என்று சிலர் விவகாரங்கள் பேசு வார்கள். அறிவும் ஞானமும் உள்ள உருவங்களை உடை என்று நான் சொல்லவில்லை. முட் டாள்தனமான கருத்துக் களைக் கொண்ட விக்ர கங்களை வேண்டாம் என்று சொல்லுகிறேன்.

இந்தப் படத்திற் குரியவரின் கருத்துகள் நமக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவ ரது ஆராய்ச்சி  மிகுந்த அவருடைய புத்தகங் களை நீங்கள் படிக்க வேண்டும் என்று கூறி அவருடைய படத்தினைத் திறந்து வைக்கிறேன் என்றார் தந்தை பெரியார்.

ஆம். அந்தப் படத்திற்குரிய சிந்தனைச் சிற்பிதான் மயி லாப்பூர் வெங்கடாசலம் சிங்கார வேலர். அவரின் 152 ஆம் ஆண்டு பிறந்த வரலாற்று குறிப்பு நாள் இந்நாள் (1860).

அவருடைய திறமை, அறிவு, ஆற்றல், தியாகபுத்தி ஆகியவைகளை அளவாகக் கொண்டு மதிப்பிட வேண்டு மானால் தோழர் ம.சிங்கார வேலருக்கு லெனின், டிராட்ஸ்கி, சக்வத்வாலா போன்றவர்களின் வரிசையில் இடந்தரவேண்டும். ஆனால் கந்த புராணம், காந்தி புராணம் படிக்கும் இரு வகையினரையும் போற்றிப் புகழ்ந்த மக்கள், இந்த ஒப்பற்ற புரட்சி வீரனை சாமான்யமாகக் கருதினர். நாளா வட்டத்திலே சில இலட்சிய வாதிகளுக்குத் தவிர, மற்றவர்களுக்கு அவர் பெயரே மறந்துவிட்டது என்று கூறிவிடலாம். தோழர் ம.சிங் காரவேலரே ஏகாதிபத்தி யத்தால் தாக்கப்பட்ட முதல் வீரர் - ஆனால் முப் புரி இல்லாத காரணத் தால் மங்கினார்.

அவரது பெருமை, பாக் களில், படத்திறப்பு விழாக்களில் இல்லை!  இராது! அவர் ம. சிங்காரவேலு செட்டியார் பரதவர் குலம் (மீன் பிடிப்போர்) நெய்தல் நில நாயகர் சிங்காரவேலர் சர்மாவாக இருந்திருந்தால் அவருடைய சிலையை  மாஸ்கோவில் நிறுவவேண்டும் என்று மயிலை கூறும் என்றார் அறிஞர் அண்ணா.

ம. சிங்காரவேலர் கட்டுரை களை குடிஅரசில் எழுதிட அதிக வாய்ப்பை அளித்தவர் தந்தை பெரியார். தமக்கு மாறுபட்ட கருத்துகள் அதில் இருந்தாலும், அதனையும்  உணர்ந்து அனு மதித்துள்ளார் அறிவு ஆசான் பெரியார் ( குடி அரசு 30-9-1934)

வெறும் வர்க்கப் பார்வை போதாது. நாட்டில்நிலவும் வரு ணப் பார்வையையும் முக்கிய மாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற பாலபாடத்தை இந்திய பொதுவுடைமைக் கட்சி களுக்கும் பாலபாடமாகவும் சொல்லிச் சென்ற அந்தச் சிந் தனைச் சிற்பியைப் போற்றுவோம்!

- மயிலாடன்



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh