எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘பகவான் கிருஷ்ணனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில் லாமல் இருந்தது. அவரது தூய் மையான, மென்மையான உடல் கனலாகக் கொதித்தது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றால் தாய் கவலைப்படுவது சகஜம் தானே! எல்லாம் வல்ல இறை வனையே மகனாகப் பெற்றிருந் தாலும், யசோதா கவலைப்பட்டாள். மருந்துகள் எதற்கும் பலனில்லை. யசோதா தெய்வமகனைப் பார்த்து,

‘‘கிருஷ்ணா, என் முயற்சி களுக்கெல்லாம் பலனில்லை; நீதான் மூவுலகங்களையும் அறிந் தவன் ஆயிற்றே! உன் உடல்நிலை சரியாக ஒரு வழி கூறேன்?’’ என்று கேட்டாள்.

பகவான் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டே,

‘‘அம்மா! ஒரே ஒரு வழிதான் இருக்கிறது’’ என்றார்.

உடனே ‘‘அது எதுவானாலும் சரி, கூறப்பா! தாமதிக்காமல் செய்கிறேன்’’ என்றாள் யசோதா.

‘‘என்னிடம் அதிகமான அன்பு கொண்ட பக்தருடைய கால்பட்ட தூசியை எடுத்து வந்து என் நெற்றியில் இட்டால் எனக்குச் சரியாகிவிடும்‘’ என்றார்.

‘‘அதற்கென்ன! கோபிகளும், கோபியரும் உன்னிடம் எத்தனை அன்பு வைத்துள்ளார்கள். இதோ ஒரு நொடியில் எடுத்து வருகி றேன்’’ என்று கிளம்பினாள்.

யசோதா கோபிகள் இல்லத் திற்குச் சென்று, நிலைமையைக் கூறி, அவர்கள் கால்பட்ட தூசி யைக் கேட்கிறாள்.

ஒவ்வொருவரும், ‘‘அம்மா! கிருஷ்ணனுக்காக எங்கள் உயி ரையே கொடுப்போம்! ஆனால், எங்கள் கால்பட்ட தூசி அவர் நெற்றியில் படுமானால், எங் களுக்கு ‘‘நரகம்‘’ கிடைப்பது நிச்சயம்!’’ என்று கூறினர்.

கடைசியில், யசோதா ராதையின் இல்லத்திற்குச் செல்கிறார்.

‘‘அம்மா இதோ தருகிறேன்’’ என்று எடுத்துக் கொடுக்கிறாள்.

யசோதா ஆச்சரியத்தில்,

‘‘அம்மா ராதா! உன் கால் தூசி கண்ணன் நெற்றியில் படுமானால், உனக்கு நரகம் நிச்சயம், பரவாயில்லையா?’’ என்று கேட்டாள்.

உடனே ராதா, ‘‘அம்மா! அப்படியாயினும் நான் பாக்கியம் செய்தவள். என் கண்ணனுக்காக அல்லவா நரகம் செல்கிறேன். தாம திக்காமல் கால் தூசியை எடுத் துக்கொள்ளுங்கள்...’’ என்கிறாள்.

அவ்வாறே அந்தத் தூசியை எடுத்துச் சென்று பகவான் கிருஷ் ணன் நெற்றியில் ராதை கால்பட்ட தூசியைப் பூசுகிறாள் யசோதா - ஜுரம் குறைந்துவிட்டது!’’

- இவ்வளவும் ‘‘தெய்வீக அருள்ஜோதி தரிசனம்'' எனும் ஆன்மிக இதழில் (டிசம்பர் 2017) கூறப்பட்டுள்ளது.

சில கேள்விகள். அவனோ பகவான், அவனுக்குக்கூட ஜுரம் வரும், உடலில் அனல்பறக்கும் என்றால், அவன் எப்படி எல்லாம் வல்லவன்? சாதாரண மனிதன் தானே!

இந்தப் பகவான் கதைகள் எல்லாம் அசல் புளுகு மூட்டைகள் என்பதற்கு இதைவிட என்ன ஆதாரம் தேவை?

இன்னொரு கேவலம் என்ன தெரியுமா? பூரி ஜெகந்நாதனுக்கு மனைவி தேவை... இதுவரை யாரும் விண்ணப்பிக்கவில்லை... இந்த விளம்பரம் வெளிவந்த ஏடு எது தெரியுமா?

சாட்சாத் அவாளின் ‘‘தின மலர்’’தான்! (23.1.2008, பக்கம் 2).

எப்படி இருக்கிறது பக்தி?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner