எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

வைஷ்ணவர்கள் சுவர்க்கம் வேண்டி பட்டினி கிடக்கும் வைகுண்ட ஏகாதசியைப்போல சைவர்கள் என்று கருதக் கூடியவர்களின் சிவராத்திரியை தை, மாசி குளிர்காலங்களில் கொண்டாடுவார்கள்.

சைவம்-வைணவம்என் பதுஇந்துமதத்துக்குள்போட் டிக் கடைகள்தான். பெயரள வில்தான்இந்துமதம்-அதற்குள் ஆயிரத்தெட்டு போட்டிகள், முரண்பாடுகள், அடிதடிகளுக்குப் பஞ்சமே இல்லை.

அதுவும் இந்த சிவன் இருக்கிறானே - அவன் உருவத் தைப் பார்த்தாலே தெரிந்துவிடும் - ஒரு காட்டுமிராண்டிக் கடவுள் என்பது.

சிவன்பற்றி தந்தை பெரியார் படம் பிடிக்கிறார்.

புலித்தோல் தரைக்கு இசைத்து

வெள் ளெ ருக்கம்பூ சடைக்கு முடிந்து

சுடலைப் பொடிப் பூசி

கொன்றைப் பூச்சூடி

தும்பை மாலை அணிந்து

மண்டை ஓடு கையேந்தி

எலும்பு வடந்தாங்கி

மான், மழு, ஈட்டி, சூலம் கைபிடித்து

கோவண ஆண்டியாய் விடை(மாடு) ஏறி

ஒரு காலைத் தூக்கிக் கொண்டு

பேயோடு ஆடுகிறவன்

காட்டுமிராண்டியாய் இல்லாமல்

நகரவாசி - நாகரீகக்

காரனாய் இருக்க முடியுமா?

லம்பாடி நரிக்குறவனுக்கும்

இந்தச் சிவனுக்கும் என்ன

மாற்றம் சைவர்களே!

சைவப் புலவர்களே

அருள்கூர்ந்து கூறுங்கள்.

- ஈ.வெ.ரா.

(‘விடுதலை', 18.5.1956)

இடுப்பில்புலித்தோல்,உடல் முழுவதும்சுடுகாட்டுச்சாம்பல், மண்டை ஓடு கையில், மழு, ஈட்டி, சூலம் வகையறாக்கள் ஆயுதங்கள்-காளைமாட்டு வாகனம்- இப்படி இருப்ப வன்மனிதக்காட்டுவிலங் காண்டிக்காலத்தில் உருவகப் படுத்தப்படுபவனாகத் தானே இருக்க முடியும். கபாலி என்றால் மண்டை ஓட்டைக் கையில் ஏந்தியவன் என்று பொருள்?

Man Created God in his own image - மனிதன் தன் னைப் போலவே தன்னால் உண்டாக்கப்பட்ட கடவுளையும் கற்பித்தான் என்பது இதுதான்.

மகாவிஷ்ணு பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டவன்; அவன் கையில் சங்கு சக்கரம் இருக்கிறது. கொஞ்சம் வளர்ச்சி அடைந்த காலகட்டத்தில் இவன் உருவாக்கப்பட்டவன் என்கிறார் தந்தை பெரியார்.

மனிதன் மிருகங்களோடு மிருகமாய் காட்டுக் குகைகளில் வாழ்ந்து வேட்டையாடிப் புசித்துக் கொண்டிருந்த காட்டு விலங்காண்டிக் காலத்தில் உருவகப்படுத்தப்பட்ட கட வுளை, ஒரு நாள் கண் விழித்து, விரதம் இருந்து பூஜித்தால் சொர்க்கம் கிடைக்கும் என் றால், இதன் பொருள் என்ன? இவன் சிந்தனை இன்னும் காட்டுவிலங்காண்டிக் காலத்தில் சஞ்சரித்துக் கொண்டு கிடக்கிறது என்பதுதானே!

- மயிலாடன்