எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘மத்திய அரசு எதைச் செய்தாலும், அதை எதிர்ப்பது என்பதுவாடிக்கையாகிவிட் டது. இவர்களின் ஹிந்தி எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு, நவோதயா பள்ளி எதிர்ப்பு என்பதெல்லாம் தமிழக தேசிய நீரோட்டத்தில் கலக் கக் கூடாது என்ற கெட்ட எண்ணத்தால்தான்.

- இது ஆர்.எஸ்.எஸ். வார ஏடான ‘விஜயபாரதத்தின்' (23.2.2018) தலையங்கமாகும்.

இதன்மூலம்

ஆர்.எஸ்.எஸ். என்ன சொல்ல வருகிறது? தேசியம் என்றால் இந்தி, சமஸ்கிருதம், நவோதயா ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

இந்து ஆரியக் கலாச்சாரத் தோடு கலந்துவிட வேண்டும் என்றுதானே பொருள்.

அவர்கள்சொல்லும்இந் தக்கலாச்சாரத்தில்-இந் தியாமுழுமையும்உள்ள மாநிலங்களுக்கு,அங்கு வாழும் இன மக்களுக்கு அவர்கள்தாய்மொழிக்கு, அவர்களின் தனித்தன்மை யான கலாச்சாரத்துக்கு இடம் இல்லை என்று ஆகிவிட்டதா இல்லையா?

1957 ஆம் ஆண்டு நடை பெற்ற தேர்தலின்போது இன்றைய பா.ஜ.க.வின் பூர்வ பெயரான ஜனசங்கம் வெளி யிட்ட தேர்தல் அறிக்கை என்ன கூறுகிறது?

இந்தியாவுக்குத் தனித்தனி மாநிலங்களே கூடாது என்று அதிகாரப்பூர்வ தேர்தல் அறிக்கையில் அப்பட்டமாக வெளியிடப்படவில்லையா?

இதன் பொருள் என்ன? ஒரே தேசம் - அது பாரத் வர்ஷா; ஒரே மதம் - அது இந்து மதம்; ஒரே மொழி - அது சமஸ்கிருதம் என்பதற்கான அஸ்திவாரம்தானே!

மொழிப் பிரச்சினைக்கு அவர்கள் கூறும் தீர்வுதான் என்ன?

ஒரே ஒரு தீர்வுதான் -

‘‘நமது தேசிய மொழி பிரச்சினைக்கு வழிகாணும் முறையில், சமஸ்கிருதம் அந்த இடத்தைப்பெறும்வரைவச திக்காக ஹிந்தி மொழிக்கு நாம் முன்னுரிமை தரவேண் டியிருக்கும்.ஹிந்திமொழி யில் எந்தவிதமான அமைப் புடையஹிந்தியைப்பயன் படுத்தவேண்டும்? எந்த ஹிந்திவடிவம்மற்றபார தீயமொழிகளைப்போல சமஸ்கிருதத்திலிருந்து தோன்றி வளர்ச்சி பெற்றுள் ளதோ அதை இயற்கையாக நாம் தேர்ந்தெடுப்போம்.''

(ஆர்.எஸ்.எஸின் ஞான குருவான கோல்வால்கரின் ‘ஞானகங்கை', பகுதி-2, பக்கம் 51).

இந்த ஆபத்தான ‘நல்ல' பாம்புதான் ‘வளர்ச்சி', ‘மாற்றம்' என்ற முகமூடி அணிந்து வரு கிறது.

எச்சரிக்கை! எச்சரிக்கை!!

- மயிலாடன்