எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: ‘‘கண்டவர் விண் டிலர் விண்டவர் கண்டிலர்'' என்பதற்கு என்ன பொருள்?

பதில்: சாமி, கோவில், பூஜை, தியானம் என எப் போதும் அளவுக்கு மீறிக் கொண்டிருப்பவர்கள் அதிகம் பேசமாட்டார்கள். இறைவனை உணர்ந்தவர்கள் இல்லை. இறை வனை உணர்ந்தவர்கள் அதிகம் பேசமாட்டார்கள், அமைதியாக இருப்பார்கள்.

‘விஜயபாரதம்',

ஆர்.எஸ்.எஸ். வார இதழ்

அப்படியா!

எதற்காக ஆண்டுதோறும் கோவில் திருவிழாக்கள், தேரோட் டங்கள், இலட்சார்ச்சனைகள், திருக்கல்யாணங்கள், சூரசம் ஹாரங்கள், குடமுழுக்குகள், காலட்சேபங்கள், உபந்நியாசங் கள்?

இராமனை வைத்து ர(த்)த யாத்திரை நடத்தப்படுவது ஏன்? ஆண்டுதோறும் ராம்லீலா என்ற பெயரில் இராவணாதிகளைக் கொளுத்துவது ஏன்? அதில் குடியரசுத் தலைவர், பிரதமர் வகையறாக்கள் குடும்பத்துடன் அமர்ந்து குதூகலிப்பது ஏன்?

மதுரையில் ஆண்டொன் றுக்கு294நாள்கள்கோவில் திருவிழாக்கள் நடந்துகொண்டுள் ளனவே - இவை பக்திக்காகவா? புரோகிதத்தின் தொப்பையில் அறுத்துக் கட்டவா? கல்லாப் பெட்டி நிரம்பி வழியவா?

பார்ப்பனஏடுகளில்(தமிழ், இங்கிலீஷ்)இரண்டுபத்திகளில் கோவில்களில் எங்கெங்கெல் லாம் பக்தி உபந்நியாசங்கள் நடக்கின்றனஎன்றுபட்டியல் வெளிவருகிறதே - பார்த்ததில் லையா- படித்ததில்லையா?

வாராவாரம் ஆன்மிகம் என்ற பெயரில் சிறப்பு இதழ்களை ஏடுகள் வெளியிடுகின்றனவே - இவற்றை எந்தப் பட்டியலில் வைப்பதாக உத்தேசம்?

தமிழகத்தில் தொலைக் காட்சி மற்றும் பொதுச் சொற் பொழிவுகளில் பகவத் கீதை, உபநிடதம், வேத கலாட்சேபம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற் பவர்களில் சிலரது பெயர்கள் இதோ:

1. ஸ்ரீ ராமாலு ராமானுஜதாசர்

2. ராகேஷ் சேஷாத்திரி ஸ்வாமி கள்

3. போதேந்திர ஸ்வாமிகள்

4. ஸ்ரீ பாஷ்யம் ஸ்ரீ ஸ்வாமிகள்

5. திருவேங்கட ராமானுஜ ஜீயர்

6. ஸ்ரீ மதுரகவி ராமானுஜ ஜீயர்

7. டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரி கள்

8. கிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள்

9. சசீதரநாதன் சாஸ்திரிகள்

10. ஸ்ரீ ராமகோபாலன் பாகவதர்

11. பத்ராசலம் ராமதாசர்

12. உதயலூர் கல்யாணராம பாக வதர்

வாரியார் வாழ்நாள் பூரா வும் கடவுள், பக்தி என்று வாயை முதலீடாகக் கொண்டு காலட்சேபம் செய்தது ஏன்?

விஜயபாரதத்தில் குறிப்பிட் டுள்ள அளவுகோலின்படி சதா சாமி, கோவில், பூஜை, தியானம் என்று பேசிக்கொண்டு இருக்கும்இவர்கள்,உண்மை யில் இறைவனை உணர்ந்தவர்கள் இல்லை என்று ஒப்புக்கொள் வதாகத்தானே பொருள்?

அதற்காக ஆர்.எஸ்.எஸ். விஜயபாரதத்துக்கு ஒரு ‘சொட்டு!'

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner