எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

கேள்வி: பெரியார் ஈ.வெ.ரா. - வாரியார் ஒப்பிடுங்கள்?

பதில்: முன்னவர் நாத்திகக் கற்கண்டு; பின்னவர் ஆன்மிகத் தேன்பாகு.

(கல்கி', 8.4.2018)

இது என்ன வெண்டைக்காய், விளக்கெண்ணெய்ப் பதில்! முன் னவர் வாழ்ந்தது. பாடுபட்டது மக்கள் சமூகத்தில் உயர்வு - தாழ்வு இருக்கக்கூடாது; பேதமற்ற இடம்தான் மேலான திருப்தியானஇடமாகும்என் பதற்கான சமத்துவ நிலைக்காகத் தான்!

பின்னவர்வாழ்ந்தது, பிரச்சாரம் செய்ததெல்லாம் பழைமை மாறாமல் ஏற்றத்தாழ்வு நிலையைப் பராமரிப்பதற்கான தண்ணீர்ப் பாய்ச்சல்.

ஆரோக்கியம் பெறவேண்டி ஆதித்தனை வணங்கு

செல்வம் பெறவேண்டி

அக்னியை வணங்கு

ஞானம் பெறவேண்டி

முருகனை வணங்கு

ஆற்றல் பெறவேண்டி

அம்பிகையை வணங்கு

சுகம் பெறவேண்டி

திருமாலை வணங்கு

கிழக்கு நோக்கி உண்பார்க்கு

ஆயுள் வளரும்

மேற்கு நோக்கி உண்பார்க்கு

பொருள் சேரும்

தெற்கு நோக்கி உண்பார்க்கு

புகழ் உண்டாகும்

வடக்கு நோக்கி உண்பார்க்கு

நோய் வளரும்

இவையெல்லாம் யாரின் அருள் வாக்கு?'

சாட்சாத் திருமுருக கிரு பானந்த வாரியாருடையது.

(நூல்: வாரியார் பொன் மொழிகள்', வானதி பதிப்பகம் வெளியீடு, பக்கம் 10).

வாரியாரின்இந்தப்பொன் மொழிப்படி ஒருவன் நடந்து கொண்டால், அறிவு வளருமா? ஆரோக்கியம் பெருகுமா? ஆற் றல்மிகுமா? ஆயுள் கூடுமா? வெற்றிதான் கிட்டுமா?

சோம்பேறித்தனத்துக்கும், தன்னம்பிக்கை இன்மைக் கும்தானே இட்டுச் செல்லும்?

ஆனால், நாத்திகரான தந்தை பெரியார் என்ன சொல் லுகிறார்?

நம்முடைய சமுதாயம் குரங்குப்பிடிச் சமுதாயம்; உலகம் முக்காலே அரைக்கால்வாசி முன்னேற்றம் அடைந்த பிறகும், இது முன்னோர் சொன்னபடி நீண்ட நாளாக நடந்துவந்த பழக்கம் என்று கூறி, முதுகு பக்கம்பார்த்துக்கொண்டுபிடி வாதமாக நடந்து, இன்னும் காட்டுமிராண்டித் தன்மையி லேயே இருக்கிறது.''

(விடுதலை', 16.11.1967)

1. முன்னோர்கள் சொன்ன படி நடக்கவேண்டும்.

2.முன்னோர்கள்(பெரிய வர்கள்) எழுதியபடி நடக்க வேண்டும்.

3. பெரியவர்கள் நடந்த படியே நாமும் செல்லவேண்டும்.

இந்த மூன்று முட்டுக்கட்டை களை ஒழித்தாலொழிய நாடு முன்னேற முடியாது.

- தந்தை பெரியார்

(விடுதலை', 22.5.1959)

பெரியார் யார்? வாரியார் யார்? இப்பொழுது புரிகிறதா?

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner