எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதே குடந்தையில்தான்...

கும்பகோணம்கோவில் களில் 20.10.1950 இல் நடக்கவி ருக்கும் விஜயதசமி திருநாளில் பல கோவில்களில் இருந்து புறப்படும் வாகனங்களைப் பாமர மக்களைக் கொண்டு சுமக்கச் செய்து அதில் அர்ச்சக பார்ப்பனர்களைஏற்றிவைத்து ஊர்வலம் வருகிற பழங்கால அநாகரீக பழக்கம் வகுப்பு துவேஷத்திற்கு இடம் தருமென் றும், அதனால் திராவிட மக் களின் மனம்  புண்படும் என்றும்கும்பகோணம் நகர திராவிடர்கழகம் கருதிஅதைத் தடுக்கவேண்டுமென்று அரசாங் கத்திற்கு- அது சம்பந் தப்பட்ட கோவில் நிர்வாகஸ்தர்களுக்கு 11.10.1950 இல் இரண்டு அறிக் கைகள் விடுத்திருந்தது.

இதனால் இந்நகரில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டு இந்நகர் திராவிட வகுப்பைச் சார்ந்த பெருவாரியான மக்கள் இதைத் தடுப்பதற்கு ஆதரவு கொடுக்க முன்வந்ததை கோவில் நிர்வாகஸ்தர்கள் உணர்ந்து அவர்கள் ஒன்றுகூடி அர்ச்சகர்களையோ அல்லது எந்த பார்ப்பனரையோ ஏற்றக் கூடாது என்று தடை செய்து நிறுத்திவிட்டது.

அதற்கு இணங்க 20.10.1950 - இல் ஊர்வலம் வந்த 25 கோவில்களுக்கு சம்பந்தப் பட்ட வாகனங்களில் யாரும் ஏறாமலேயே ஊர்வலம் வந்ததை திராவிட மக்கள் அனைவரும் கண்டு மகிழ்ச்சி யடைந்தனர்.

இதுவரை பன்னெடுங் காலமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த 25 கோவில்களிலும் ஒவ்வொரு வாகனத்திலும் அர்ச்சகர், குடைபிடிப்பவர், வெண்சாமரம் வீசுபவர்கள் என்கின்ற பெயரால் சுமார் 4 பேர்களையாவது ஏற்றி மதத்தின் பெயரால் பவனி வருவது வழக்கமாக இருந்தது. ஆனால், இந்த ஆண்டு யாரும் ஏறாமலேயே இந்த உற்சவம் நடைபெற்றது சமுதாயத் துறையில் ஒரு மாபெரும் புரட் சியாகும்.''

(விடுதலை, 21.10.1950)

***

குடந்தையில் அண்ணா சாமி பாகவதரின் தொடர் கதாகாலட்சேப உபந்நியாசம் 14.5.1964 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

குடந்தை கழகத் தோழர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

குடந்தை தொடர்வண்டி நிலையத்திலிருந்து அணைக் கரை டேப் தங்கராசு இராவணன் வேடந்தரித்து  - இராமன், சீதை, இலட்சுமணன் வேடங்களும், மக்களைமடமையில்ஆழ்த் தும் ஆரியர் பொய்க் கதை களை அம்பலப்படுத்தும் வேடங்களும் தாங்கி, மூட நம்பிக்கை ஒழிப்பு, ஆரியப் பித்தலாட்ட மோசடி எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஊர்வலமாக சென்று பரப்பினர்.

அதன் விளைவு என்ன தெரியுமா?

அண்ணாசாமி பாகவதர் குறிப்பிட்ட தேதிக்கு முன்ன ரேயே மூட்டைக் கட்டி ஆளை விடுங்க சாமி' என்று ஓட்டம் பிடித்தார்!

இதுபோன்ற செயற்கரிய செய்கைகள் என்ற முத்திரை யைப் பொறித்தது குடந்தை!

ஆம்! அந்தக் குடந் தையில்தான் வரும் ஞாயிறன்று திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு!

வாரீர்! வாரீர்!!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner