எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒடிசா மாநிலத்தில் உள்ளது புரி ஜகன்நாதர் ஆலயம்; புரி ஜகன்நாதருக்கு ஒடிசி நடனம் பிடிக்கும் என்பது நம்பிக்கை. இத னால், இக்கோவிலில், 15 ஆம் நூற்றாண்டு முதலே தேவதாசி முறை அமலில் இருந்தது. பெண் குழந்தைக்கு ஏழுவயதானதும்,சாரிபந் தன்'என்றநிகழ்வுமூலம், தேவதாசியாக தேர்ந்தெடுக் கப்படுவர்.

அத்துடன்,புரிஜகன் நாதரின்முன்நடனமாடும் மனைவி என்ற அந்தஸ்தை யும் பெறுகின்றனர். இப் பெண்கள், மற்ற சாதாரண மனைவியர் போன்று, கணவன் நலம் வேண்டி, சாவித்திரி விரதம் கூட இருப்பதுண்டு.

தினமும் காலையில், இரவு நடை சாத்துவதற்கு முன், அலங்காரத்துடன், புரி ஜகன்நாதர் முன், ஒடிசி நடனம் ஆடுவர். இதுதவிர, தேர் திருவிழாவின்போது, தேருக்கு முன், தெருவிலும் நடனம் ஆடுவது உண்டு.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும், கோவில் களில் தேவதாசி முறை ஒழிக் கப்பட்டது. இந்த வகையில், சசிமணி தேவி என்பவர், கடைசி தேவதாசியாக இருந்தார். இவர், 93 வயதில் காலமானார். அதற்கு, 10 ஆண்டுக்கு முன்பே, நடனம் ஆடுவதை நிறுத்தி விட்டார்.

தேவதாசி முறை ஒழிந் தாலும், பாரம்பரியம் தொடர, இன்றும், புரி ஜகன்நாதர் தேர் திருவிழா மற்றும் கோவில் திருவிழாக்களின் போது, ஒடிசி நடன கலை ஞர்கள்,தாங்களாகவேமுன் வந்து நடனம் ஆடி, ஜகன் நாதரையும், பக்தர்களையும் மகிழ்விக்கின்றனர்.

(தினமலர்', வாரமலர், 2.9.2018, பக்கம் 30)

இதே தினமலரில்' (23.1.2008, பக்கம் 2)

ஒரு செய்தி வெளிவந்தது. அதன் தலைப்பு:

"புரி ஜெகநாதருக்கு மனைவி தேவை!'  இது வரை யாரும் விண்ணப்பிக்க வில்லை!'' என்பதுதான் அந் தத் தலைப்பு!

தேவதாசியாக இருந்த  சசிமணி தேவிக்கு வயதாகி விட்டதால் (85) இப்படி ஓர் அறிவிப்பாம்.

கோவில் விபச்சார விடுதி' என்று காந்தியார் சொன்னதை (தமிழ்நாட்டில் காந்தி'', பக்கம் 53) நினைவு கூரத் தக்கது.

கடவுள்என்றுசொல் லிக் கொண்டு உருவம் கற்பித்து அந்தக் கடவுளுக் குப்பெண்டாட்டி,பிள்ளை, வைப்பாட்டி என்பதெல்லாம் தான் இந்து மதம் - தெரிந்து கொள்வீர்!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner