எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பொது வாழ்க்கை, மக்கள் சேவை என்பது இன்றைக்கு விளம்பரமும், வியா பாரமுமாகிவிட்ட நிலையில், அதற்கு அக் காலத்திலேயே இலக்கணம் வகுத்தவர் பெரியார். நூறாண்டுகளுக்கு முன்னால், இலாபம் தரும் தொழிலையும், 29 கவுரவ பதவிகளையும் தூர எறிந்து விட்டு பொதுவாழ்க்கைக்கு வந்தவர் பெரியார். காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டவுடன், காந்தியின் கொள்கைகள் மீது கொண்ட பற்றால், பகட்டான ஆடைகளை தூர எறிந்து விட்டு, கதர் ஆடைகளை அணிந்தார். மதுவிலக்கு கொள்கையில் தீவிரபற்றுக் கொண்டபெரியார், மதுவிலக்கு பிரச்சாரம் செய்யும் போது தனது தோப்பிலிருந்த  அய்நூறு தென்னை மரங்களை, அதன் மூலமாக 'கள்' இறக்கப் படுவதைத் தடுப்பதற்காக அதன் வருவாய்-இலாபங் களைக் கூடப் பொருட்படுத்தாது  சிக்கனமே தனது வாழ்க்கை முறையாகவே கடைப்பிடித்த தந்தைபெரியார் அதனை வெட்டி சாய்த்தார். கள்ளுக்கடைப் போராட்டம் தீவிரமாகி பெரியார் கைதானவுடன், தன்வீட்டுப் பெண்டிரை, மனைவி நாகம்மை யாரையும், சகோதரி கண்ணம்மாவையும் போராட்டத்தில் கலந்துக் கொள்ள செய்தார். ஒருக்கட்டத்தில் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்தபோது, காந்தியார் அவர்களிடம் போராட் டத்தை நிறுத்த வேண்டும் என்று கேட்டு கொண்ட போது, கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை முடிப்பது தன் கைகளில் இல்லை, ஈரோட்டில் உள்ள இருபெண்களிடம் தான் உள்ளது என்று கூறினார் காந்தியார். தான் மட்டுமின்றி தன் குடும்பத் தாரையும் பொதுவாழ்க்கையில் ஈடுபடுத்தி மற்றவர்களுக்கு முன்னு தாரணமாக திகழ்ந்தார்.

ஈரோடு நகராட்சித் தலைவராக இருந்தபோது பல அருஞ்செயல்களை ஆற்றியுள்ளார். கடைத்தெரு மிகக்குறுகலாக இருந்தது; மக்கள் நடப்பதற்கும் போக்குவரத்துக்கும் இடைஞ்சல்கள் இருந்தன. தெருவை விரிவாக்க வேண்டுமெனில், இரு பக்கங்களிலும் இருக்கும் கடைகளை இடித்துத் தள்ள வேண்டும். கடைகள் வைத்திருப்போரோ நண்பர்கள்,  அவரது சாதியை சார்ந்தவர்கள். ஆனாலும் சிறிதும் அஞ்சாமல் இடித்து தள் ளினார். நண்பர்களும் சாதிக்காரர்களும் கொதித்தெழுந்து, இப்படியெல்லாம் செய்வதற்கா உன்னை தேர்ந்தெடுத்து அனுப் பினோம் என்று கோபத்துடன் கேட்ட போது, ‘இவனுக்கு (பெரியார்) ஒட்டுப் போட்டால் இவன் என்ன செய்வான் என்று அப்போதல்லவா நீங்கள் யோசித்து இருக்க வேண்டும் என்று பதில் கேள்விக்கேட்டு அவர்களை திகைக்க வைத்தார். நண்பர் களின் கோபங்களைப் பெற்றாலும் பொதுமக்களின் நன்மதிப்பை பெற்றார்.  அதுமட்டுமல்ல. சாலைகளில் ஆடு, மாடுகள் திரிந்த தால் பெரும் இடையூறாக இருந்தது. அவைகளைப் பிடித்து பவுண்டில் அடைக்க உத்தரவுவிட்டார். வேடிக்கை என்ன வென்றால், அவரது மனைவி நாகம்மையார் வளர்த்த ஆடு களும் பிடித்து அடைக்கப்பட்டன. அபராதம் கட்டவேண்டும் என்று நகராட்சி உத்தரவிட்டது. நாகம்மையார் சங்கடப்பட்டார். பொதுநலத்திற்காக நான் போட்ட உத்தரவு, அதிலிருந்து பின் வாங்க மாட்டேன்என்று உறுதியுடன் கூறிவிட்டார். வேறு வழி, அம்மையார், அபராதம் கட்டி ஆடுகளை மீட்டார். இன்றைக்கு இது பொதுவாழ்க்கைக்கு வருவோர் கைக்கொள்ள வேண்டிய பெரும் அறம் அல்லவா இது.

வைக்கம் போராட்டம்

கேரளாவில் வைக்கம் என்கிற ஊரில், கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடக்கக் கூடாது என்கிற தடையை எ திர்த்துப் போராட, பெரியார் அழைக்கப்பட்டார். போராட்டத்திற்கு தலைமையேற்க பெரியார் அங்குசென்ற போது திருவாங்கூர் சமஸ்தான அரசு அவருக்கு ‘அரசுமரியாதை’ அளித்து வரவேற்கவந்தது.  காரணம், அவரது குடும்பம் சமஸ் தான அரசக் குடும்பத்தோடு நெருங்கிய நட்புக் கொண்டி ருந்தது. தான், அரசையும், கோவில் நிருவாகத்தையும் எதிர்த்துப் போராடவந்துள்ளதாக கூறி அன்புடன்அதனைமறுத்து விடு கிறார். போராட்டத்தின் தொடர்ச்சியாக பின்னாளில் அதே அரசாங்கம் அவரைக் கைது செய்து கடுங்காவல் தண்டனை யளித்தது இன்னொருசெய்தி. தனது கொள்கைக்காக, மக்களின் நலனுக்காக,  எந்தவிதசமரசத்திற்கும் செய்துக் கொள்ளாதவர் பெரியார்.

பெரியார் இறை மறுப்பாளர். தன் வாழ்நாள் இறுதி வரை நாத்திகராக வாழ்ந்தவர். அதற்கானஅமைப்பினை நடத்தினார். அவரது தொடக்கக் காலத்தில் ஈரோட்டில் பல கோயில்களில் நிருவாகத் தலைவராக பணியாற்றி, அனைவரும் மெச்சும் வண்ணம் சிறப்பாக செயல்பட்டவர். குறிப்பாக கணக்கு வழக்கு களில் கறாராக இருந்து நற்பெயரை பெற்றவர்.

மானம் பாராப் பொதுத் தொண்டு!

பொதுத்தொண்டு செய்ய வருபவர்கள் மான அவமானங் களைப் பார்க்கக்கூடாது என்பதில்பெரியார் தெளிவாக இருந்தார்.  குடிசெய்வார்க்கில்லை பருவம்மடிசெய்து, மானங் கருதக் கெடும் என்கிற குறள்படிவாழ்ந்தார். மாலைகளும் பாராட் டுகளும், செருப்படிகளும், தூற்றுதல்களும் அவருக்கு ஒன் றாகவே இருந்தன. தன்னை நேரடியாக யாராவது புகழ்ந்து பேசினால், கோபம் கொண்டு,போதும் நிறுத்துங்க என்று முகத்திற்கு நேராக  சொல்லி விடுவார். அதே நேரத்தில், தன் கருத்துகளை மறுப்பவர்களிடம் பகைமை பாராட்டாது அவர்கள் பேசுவதற்கு உரிமை  அளித்தார். அவரது பொதுக்கூட்டங்களில், அவரது பேச்சுக்குப் பின்பு, கேள்வி - பதில் இடம் பெறுவது வாடிக்கை. ஒரு முறை, பார்வையாளர் ஒருவர், கடவுள் இல்லை என்று பேசுகிறீர்களே, ஒருவேளை கடவுள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது, சிறிதும் தயங்காது, கடவுள் இருக்கிறார் என்று சொல்லி விட்டு போகிறேன் என் கிறார். இப்படி வாழ்க்கையை எதார்த்தமாக பார்த்தவர். இம் மக்கள், மானமும் அறிவும் பெற்று, ஏனைய சமுகத்தினர் போல உயர்நிலை அடைய வேண்டும் என்பதற் காகவேதான் இத் தொண்டினை மேற்கொண்டிருப்பதாகவும், மேலும், அதனை செய்வதற்கு யாரும் முன் வராததால் இத¬னைத் செய்கிறேன் என்று தன்னடக்கத்தோடு சொன்னவர் - சொன்ன படியே தொண்டு செய்து பழுத்த பழம் ஆனவர் - பொதுத் தொண்டில் புதிய இலக்கணமும், அதற்கான நெறி முறைகளை வகுத்தவர் தந்தை பெரியாரே!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner