எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வடமாநிலங்களில்கிருஷ் ணர் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெற்றது, இக்கொண்டாட்டம், தொடர்பாகஜைனேந்திர குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவர் கிருஷ்ணனின் பிறந்த நாள் எது? அவருடைய பிறப்புச்சான்றிதழ் எங்கே? என்று கேட்டுள்ளார்.

கிருஷ்ணர் மதுராவில் பிறந்ததாகக் கதைகளில் கூறப் பட்டுள்ளது. அவர் பிறந்தார் என்று உறுதியாக தெரியாத  நிலையில்புராணங்களில்உள்ள கதைகளைசான்றாகவைத்து  அஷ்டமி  நாளில் கிருஷ் ணரை வழிபடுபவர்கள் கொண் டாடுகின்றனர். அதிலும் சைவர்கள் என்னும் சிவனை வழிபடுபவர்கள் கிருஷ்ணனின் பிறந்தநாள் குறித்த நாள் உண் மையானதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூரில் வசிக்கும் தகவல் ஆர்வலர் ஜைனேந்திர குமார் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறதே அது ஏனென்றும், அவர் பிறப்பிற்கான சான்றுகள் எங்கே என்றும், அவரது பிறப்புச் சான்று உள்ளதா என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பிலாஸ்பூர் மாவட்ட  கூடுதல் நீதிபதி ரமேஷ் சந்த் இந்த வழக்கு தொடர்பான வாதத்தின்போது  சிறீகிருஷ்ணர் பிறப்பு என்பது ஒரு மதத்தவரின் நம்பிக்கை ஆகும். பெரும்பான்மையான மக்கள் அதை நம்பி அவரு டைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்றனர். இது நம்பிக்கையின் அடிப்படையில் கொண்டாடப்படுவதாகும். கிருஷ்ணனின் பிறப்பு சான்றிதழ் கோரி இது போல மனு செய்வது தேவையில்லாத ஒன்றாகும். இது போன்ற கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என தெரிந்து கொண்டு மற்றவரின் நம்பிக்கையை புண்படுத்தும் செயல் இது!'' எனத் தெரிவித்துள் ளார்.

ஆயினும் அந்த மனுவை நீதிபதி ரமேஷ்சந்த் மதுரா நகரின் பிறப்பு - இறப்பு விவரங்களை கவனிக்கும்நகராட்சிஆணை யரிடம் அனுப்பி வைத்துள்ளார்.    இந்தமனுவுடன்இதற்கான கட்டணமாகஒருபோஸ்டல் ஆர்டர் இணைக்கப்பட்டிருந்த தால் சட்டப்படி இந்த மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மதப் பிரச்சினை - இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை கிடையாது - தேவையில்லாதது என்பது போன்ற பதில்கள் எல்லாம் தப்பித்துக் கொள்வதற்கான சந் துகளே தவிர - கேள்விகள் தவறு என்று எப்படிக் கூற முடியும்?

பிறப்பு - இறப்பு அற்றவன் கடவுள் என்று ஒரு பக்கத்தில் கூறிக்கொண்டே, ராம நவமி என்றும், கோகுலாஷ்டமி என் றும் கரடி விட்டு, அதற்காக விழாக்களை நடத்தி மக்களின் பொருளையும், உழைப்பையும், காலத்தையும்சுரண்டுவது- கரியாக்குவது கிரிமினல் குற்ற மல்லவா!

மதம் என்ற காரணத்தால் நாசகார காரியங்கள் அங்கீகரிக் கப்படுவது வெட்கக்கேடுதானே!

கடவுளை மற - மனிதனை நினை!      - தந்தை பெரியார்    - மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner