எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்று (23.1.2019) சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் (1897). மோடி அரசு 2014 ஆம் ஆண்டு ஆட் சிக்கு வந்த பிறகு பரபரப்பாக தன்னை காட்டிக்கொள்ள பல விவ காரங்களைக் கையில் எடுத்தது; அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குறித்த மரணம் பற்றிய தகவலும் ஒன்று. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானுக்கு விமானத்தில் சென்ற போது தைவான் நாட்டில் நடந்த விமான விபத்தில் இறந்துவிட்டதும், அவருக்குநினைவுத்தூண்மற்றும் அவரது சாம்பல் அங்கு வைக்கப் பட்டிருப்பதும் அனைவரும் அறிந் ததே.  ஆனால் இந்த விவகாரத்தில் நீண்ட ஆண்டுகளாகவே பல்வேறு கட்டுக்கதைகள் உலாவருகின்றன. அதில் நேதாஜி, ரஷிய சிறையில் உயிருடன் இருக்கிறார். மற்றும் காசியாபாத்தில்(விவசாயியாக வாழ்கிறார்). இமயமலையில் சாமி யாராக உலவுகிறார். வாரணாசியில் ஆசிரமம் ஒன்றில் உயிருடன் இருக்கிறார் என்று பல்வேறு கட்டுக் கதைகள்.

இந்தக்கட்டுகதைகளை உயிர்ப்பித்து மெருகூட்டி மேலும் பரபரப்பாக்கும் வேலையை மோடி அரசு கையாண்டது. 2015 ஆம் ஆண்டு மோடி ரஷ்யா செல்லும் முன்பு  நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆவணம் என்ற பெயரில் சில ஒளிப்படங்களை மத்திய அரசு வெளியிட்டது. அந்தஒளிப்படங்களில்உள்ள காகிதத்தில், நேரு ஆங்கிலேயர்களி டம் நேதாஜிக்கு எதிராக நடவ டிக்கை எடுக்கும்படி கடிதம் எழு துவதுபோல் இருந்தது. ஆனால், அந்த ஆவணங்கள் வெளிவந்த மறுநிமிடமே அதன் போலிமுகம் வெளியாகிவிட்டது. காரணம் அந்த கடிதங்களில் உள்ள எழுத்துகள் அனைத்தும் கணினியில் டைப் செய்யப்பட்டவை.நேருவின் காலத்தில் அப்போதையசெக்கோஸ் லோவியா நாட்டின் இருந்து இறக்கு மதி செய்யப்பட்ட டைப்ரேட்டர்கள் அதிக அளவில் இந்தியாவில் புழக் கத்தில் இருந்தன. அரசு அலுவகங்களில் ஆங்கிலேய நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட டைப் ரேட்டர்கள் இருந்தன.

ஆனால் நேரு எழுதிய கடிதம் என்ற பெயரில் மோடி வெளியிட்ட ஆவணங்கள் அனைத்தும் நவீன கம்யூட்டர்கள் மூலம் டைப் செய்யப்பட்டு அது போட்டோஷாப் மூலம் பழைய காகிதம் போல் மாற்றப்பட்டிருந்தது. ஆனால், எழுத்துக்களை மாற்றாமல் விட்டு விட்டார்கள். சுபாஷ் சந்திரபோஸ் குறித்த தகவலை வெளியிட்டு காங்கிரஸின் மீது பழிபோட எண்ணிய மோடியின் எண்ணத்தில்  உடனடியாக மண் விழுந்து விட்டது. இந்த விவகாரத்தில் வேடம் கலைந்த மோடி அதன் ஆவணங்களை வெளியிட்டால் நாடுகளுடனான உறவுகள் பாதிக்கும் என்று காரணத்தைக் கற்பித்து சுபாஷ் சந்திரபோஸ் விவாகாரம் இனியும் நமக்கு வாக்குவாங்க பயன்படாது என்று கூறி முடித்து வைத்தது.

நேதாஜி முற்போக்குச் சிந்தனையாளர்

"ஜாதியை ஒழிப்பதில் நான் அதிக தீவிர நம்பிக்கையுடையவன். அது சம்பந்தமாக என்னாலான பிரச்சாரமும் செய்துவருகிறேன். சமத்துவம், நியாயம் போன்ற கொள்கைகளையேஅடிப்படை யாகக் கொண்டு உண்டாக்கப்படும் புதிய சமூகம் சுதந்திர இந்தியா வுக்குரியதாகும். சிலர் தீண்டாமையை மாத்திரம் வெறுக்கிறார்களே ஒழிய, சமபந்தி போஜனத்தையும், கலப்பு மணத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக் கின்றனர். அத்தகைய மனோபாவம் நான் கொண்டவனல்ல. நாம் எல் லோரும் ஒன்று என்றால், மனிதனுக்கு மனிதன் எவ்வித நேற்றுமையும் இருத்தலாகாது.''

- சுபாஷ் சந்திரபோஸ்

(குடிஅரசு, 26.10.1930, பக்கம் 17)

உண்மை இவ்வாறு இருக்க விஜயபாரதம்' நேதாஜி அட்டைப் படம் போடுகிறது - புத்தரையே மகாவிஷ்ணு அவதாரம் ஆக்கிய கூட்டமாயிற்றே!

- மயிலாடன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner