எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாட்டுக்கறி!

தேசிய மாதிரி கணக் கெடுப்பு அலுவலகம் (NSSO) கொடுத்த அறிக்கை யின் படி இந்தியாவில் 13 பேரில் ஒருவர் மாட்டிறைச்சி உண்கிறார். மேலும் மாட் டிறைச்சி உண்பதில் மதங்கள் யாரும் பார்ப்பதில்லை. அதா வது  ஜெர்மனியை ஒத்த மக்கள் தொகையில் உள்ள இந்தியர்கள் மாட்டிறைச் சியை உண்கின்றனர்.

இந்தியாவில் மாட்டி றைச்சி உண்பவர்கள் விழுக் காடு மாநிலம் வாரியாக

1. மேகாலயா - 80.74 2. லக்சதீப் - 77.29

3. நாகாலாந்து - 57.17

4. சிக்கிம் - 30.57

5 . ஜம்மு காஷ்மீர் - 30.44

6 . கேரளா - 25.28

7. அருணாச்சலப் பிர தேசம் - 24.83

8 . மணிப்பூர் - 23.70

9 . மிசோரம் - 22.68 10. அசாம் - 21.70

11. மேற்கு வங்கம் - 18.66

12. கோவா - 11.14

13. உத்தராஞ்சல் - 11.03

15. உத்தரப்பிரதேசம் - 9.21

16. ஆந்திரா - 8.86

17. தமிழ்நாடு - 5.89

18. மகாராட்டிரா - 5.5 19. பீகார் - 4.42

20. கருநாடகா  - 4.41

21 திரிபுரா - 4.22 22. பாண்டிச்சேரி - 3.97

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 69 விழுக்காடு மக்கள் இறைச்சி உணவை சார்ந்திருக்கின் றனர். இதில் 57 விழுக்காட் டினர் மாட்டிறைச்சி உண்ப வர்கள், மற்றவர்கள் பன்றி, கோழி, ஆடு மற்றும் ஒட்டக இறைச்சி உண்பவர்களாக உள்ளனர்.

ஓர் அரசு என்றால், மூன்று வேளை உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு என்ற இன்றியமையாத தேவைகளுக்கு உத்தர வாதம் கொடுக்கவேண்டும். அதை விட்டுவிட்டு அவர் களின் அன்றாட உணவுப் பழக்கத்தில் தலையிடுவது என்பது அத்துமீறல் வன் முறை அல்லவா!

இதில் வெட்கக்கேடு என்னவென்றால், இம் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முத லிடத்தில் நிற்கிறது.

மாட்டைக் கொன்று அதன் இறைச்சியை ஏற்று மதி செய்யலாம்; ஆனால், உள்நாட்டில் மாட்டிறைச்சி உண்ணக் கூடாதாம்!

மக்கள் முட்டாள்கள் என்ற நினைப்பா? மக்களின் அழுத கண்ணீர் ஆட்சி மலையையும் மூழ்கடித்து விடும் - எச்சரிக்கை!

- மயிலாடன்

அந்நாள் இந்நாள்

1949 - அஞ்சா நெஞ்சன்  அழகிரி மறைவு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner